அதிரை தாருத் தவ்ஹீத்தின் [ ADT ] அங்கமாகிய பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையம், கடற்ரைதெரு அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி, சிஎம்பி லேன் ஏ.எல். மெட்ரிக் பள்ளி ஆகியவை இணைந்து ஆண்டு தோறும் கோடை விடுமுறையில் நடத்துகின்ற பள்ளி - கல்லூரி மாணவ / மாணவியருக்கான இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி முகாம் எதிர்வரும் [ 03-05-2014 ] அன்று முதல் [ 15-05-2014 ] வரை மாணவர்களுக்கு பிலால் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய பயிற்சி மையத்திலும், மாணவிகளுக்கு CMP லேனில் அமைந்துள்ள AL மெட்ரிக் பள்ளியிலும் வகுப்புகள் நடைபெற இருக்கிறது.
இதற்கான அறிவிப்பு தட்டிகள் நகரின் பிராதான பகுதிகளில் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த அறிவிப்பு தட்டிகளில் பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் முன்பதிவு செய்துகொள்ளவும், விண்ணப்ப படிவங்களை பெற்றுகொள்ளவும், மேலததிக தகவல் பெறவும் அதிரை தாருத் தவ்ஹீதை அணுக அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment