அமெரிக்காவின் நியூயார்க் அருகே உள்ள புருக்ளினில் நேற்று மாலை 6.20 மணியளவில் நகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது 14 வயதான அமெரிக்க பள்ளி மாணவன் ஒருவன், தான் எடுத்து வந்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து பஸ்ஸுக்குள் தாறுமாறாக சுட்டான். இதில் ஏராளமான பயணிகள் காயமடைந்தனர். உடனடியாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனை மடக்கி பிடித்தனர். துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இதில் தலையில் குண்டு காயம் அடைந்த 39 வயது பயணி ஒருவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். விசாரணையில் அவர் டொமினிகன் நாட்டை சேர்ந்த ஏஞ்சல் ரோஜஸ் என்பது தெரியவந்தது. மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு கும்பல்களுக்கு நடுவே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து மாணவன் ஆத்திரத்தில் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதாக தெரியவந்துள்ளது. ஏஞ்சலா ரோஜஸ் டொமினிகன் நாட்டிலிருந்து மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்காவில் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment