சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வலியுறுத்துவோம் என்பது உட்பட மொத்தம் 46 வாக்குறுதிகளுடன் மதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட இந்த தேர்தல் அறிக்கையில் மொத்தம் 46 தலைப்புகளில் உறுதிமொழிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் பெயரை இந்திய ஐக்கிய நாடுகள் என மாற்றம் செய்வது முதலாவது உறுதி மொழியாகவும் 7வது உறுதிமொழியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தடையை நீக்கக் கோருவோம் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து மதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுவதாகவும், இந்தியப் பகுதிகளையும் இணைத்துத் தனிநாடு கேட்பதாகவும், ஆதாரம் இல்லாத பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மத்திய காங்கிரஸ் அரசு விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்தது. ‘விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு வன்முறை இயக்கம் அல்ல; அவர்கள் இன விடுதலைப் போராளிகள்' என நியூசிலாந்து மற்றும் இத்தாலி நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்து உள்ளன. எனவே, இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்டு உள்ள தடையை நீக்க வலியுறுத்துவோம். இவ்வாறு மதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 46 வாக்குறுதிகள் விவரம்:
1. இந்தியா பெயர் மாற்றம் - அரசியல் சட்டம் மறு ஆய்வு, மாநில சுயாட்சி, தமிழ் ஆட்சிமொழி, மத்திய வரி வருவாய் பங்கீடு
2. தமிழ் ஈழம் மலர பொது வாக்கெடுப்பு
3. சமூக நீதி 4. மதச்சார்பின்மை
5. நதிநீர் இணைப்பு, தமிழக நதிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு
6. அணைகள் பாதுகாப்பு மசோதாவைத் தடுத்தல்
7. தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்
8. தூக்குத் தண்டனை ரத்து
9. மீனவர் பிரச்சினை
10. கச்சத் தீவு
11. மீனவர் நலன்
12. சேதுக் கால்வாய்த் திட்டம்
13. கூடங்குளம் அணு உலை
14. வேளாண்மை
15. மீத்தேன், எரிவாயு குழாய்த் திட்டங்களுக்கு எதிர்ப்பு
16. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
17. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்
18. பொருளாதார சீர்திருத்தம்
19. தொழில்
20. சுற்றுச் சூழல், இயற்கை வளங்கள் பாதுகாப்பு
21. மின்சாரம்
22. இரயில்வே
23. கல்வி
24. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலன்
25. மகளிர், குழந்தைகள் நலன்
26. சிறுபான்மையினர் நலன்
27. மாற்றுத் திறனாளிகள் நலன்
28. தொழிலாளர் நலன்
29. கொத்தடிமை முறை ஒழிப்பு
30. வணிகர் நலன்
31. அரசு ஊழியர் நலன்
32. மக்கள் நல்வாழ்வு -முழுமையான மதுவிலக்கு
33. வறுமை ஒழிப்பு
34. சட்டம் மற்றும் நீதித்துறை
35. நீதிபதிகள் நியமனம்
36. தேசிய தண்ணீர்க் கொள்கை
37. சுற்றுலா
38. விளையாட்டு வளர்ச்சி
39. அயலகத் தமிழர் பிரச்சினைகள்
40. தேர்தல் சீர்திருத்தங்கள்
41. அயல்நாட்டு உறவுகள்
42. தொல்லியல் துறை
43. சாலைப் போக்குவரத்து
44. கருப்புப் பணம் மீட்பு
45. விமான நிலையங்கள் மேம்பாடு
46. புதுவை மாநிலம்
No comments:
Post a Comment