Latest News

  

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை படித்துவிட்டாரா என்பதை அறிய!!


நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.

குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா.

இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.

1. முதலில் எப்போதும் போல மின்னஞ்சல் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2. இப்போது www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள்.

3. முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Clickto Activate my Spypig” என்பதைச் சொடுக்குங்கள்.

4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீதுசுட்டியை வைத்து வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image (Firefox) & Copy(IE)” சொடுக்கி copy செய்யவும்.

5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மின்னஞ்சலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி உடனே மின்னஞ்சலை அனுப்பி விடுங்கள்.

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்துவிடும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.