சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியின்போது கிரேன் உடைந்து விழுந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். ஒரு தொழிலாளியின் கால் முறிந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகே மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது ராட்ஷச கிரேன் ஒன்று திடீரென உடைந்து விழுந்தது.
இந்த விபத்தில் பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் மற்றொரு தொழிலாளியின் கால் துண்டான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மெட்ரோ ரயில் கட்டுமானப்பணி தொடங்கியதில் இருந்து இதுவரை பல விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment