ராமநாதபுரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெற்றி பெற்றார். அதன் பிறகு அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த மனிதநேய மக்கள் கட்சி, கடந்த ஜூனில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்களித்தது.
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்
வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
ஆனால் தேமுதிக- திமுக கூட்டணிக்கு மு.க. அழகிரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அக்கட்சி, திமுக அணிக்கு வருமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் திடீரென திமுக தலைவர் கருணாநிதியை சென்னையில் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து திமுக அணியில் காங்கிரஸ் மட்டுமின்றி தேமுதிகவும் இடம்பெறும் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் திமுக அணியில் இடம்பெறுவது என்று மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment