“அனைவருக்குமான சமுதாயம் மற் றும் முன்னேற்றம் கண்டிட தடைகளை தகர்ப் போம், வாயில்களை திறப்போம்” என்ற கருப் பொருளோடு மாற்றுத் திறனாளிகளுக்கான 21-வது உலக தினம் செவ்வாயன்று உலகம் முழுவதும் கடைப் பிடிக்கப்படுகிறது. இந்த நாளையொட்டி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், உலக மக்களுக்கும் நாடுகளுக்கும் விடுத்துள்ள வேண்டுகோள் செய்தியில் “உலகம் முழுவதும் 100 கோடிக் கும் கூடுதலான மாற்றுத்திறனாளிகள் வாழ் வதை குறிப்பிட்டு, அவர்களும் சமுதாயத் தில் ஒரு அங்கமாக இணைந்து முன்னேறு வதில் உள்ள தடைகளை அகற்றுவோம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளி களுக்கான ஐ.நா. கன்வென்ஷன் விதிகளை ஏற்று இதுவரை 158 நாடுகள் கையொப்ப மிட்டுள்ளதும், இந்தியா 7-வது நாடாக 30.03.2007 கையெழுத்திட்டுள்ளதும் நினைவு கூரத்தக்கது. இந்த கன்வென்ஷனின் விருப்ப விதி முறைகளின்படி கையெழுத்திடுவது மட்டு மல்ல, ஒரு நாட்டினுடைய அரசாங்கம் இந்த விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்துவிட் டால் அந்த நாட்டில் அது சட்டமாக மதிக்கப் பட வேண்டும். அந்த வகையில், இந்த கன்வென்ஷன் விதிகளுக்கு இந்திய அரசு 01.10.2007 அன்று ஒப்புதல் அளித்தது. இந்த உடன்படிக்கை 03.05.2008 முதல் நமது நாட்டில் அமலில் உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகளை உலகின் மிகப் பெரிய சிறுபான்மையினர் என ஐ.நா. குறிப் பிடுகிறது. வளர்ந்த நாடுகளைவிட இந்தியா போன்ற ஏழை மற்றும் வளரும் நாடுகளில் இவர்கள் கூடுதல் எண்ணிக்கையில் இருப்ப தாக உலக சுகாதார நிறுவனமும் உலக வங் கியும் இணைந்து தயாரித்த 2011 ஆண்டின் மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய முதல் உலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய நிலைமை என்ன?
ஐ.நா. கன்வென்ஷன் விதிகளின்படி சட்டப் பாதுகாப்பை உருவாக்கவும், கட்டிடம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சாதனங்களையும் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கவும் நமது ஆட்சியாளர்கள் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள் என்பதுதான் யதார்த்த உண் மை. குறிப்பாக நாட்டில் வாழும் மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய அறிவியல்பூர்வ கணக்கீடு அல்லது புள்ளி விபரம் இதுவரை அரசிடம் இல்லை என்பது வெட்கக்கேடான விஷயம். ஊனமுற்றோருக்கான கன்வென்ஷ னின் சங்கநாதமே “மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கருணை அடிப்படையில் பார்க்கக் கூடாது என்பதும் உரிமைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்ப தும், அவர்களுக்கு எதிரான பாரபட்சங் களுக்கு முடிவு கட்ட வேண்டும்” என்பதும் தான். ஆனால், அடையாள சான்று முதல் எல்லாவற்றிலும் பாரபட்சமும் உதாசீனமும் இங்கு நீடிக்கிறது.
கல்வி
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 64.8 சதவீதம்பேர் கல்வி கற்றவர்களாக உள்ள நிலையில், வெறும் 49 சதம் மாற்றுத்திற னாளிகளே கற்றவர்களாக உள்ளனர். 44 சதவீத பள்ளிகள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாதவைகளாக உள்ளதாக அரசு தகவல்கள் உள்ளன. பார்வையற் றோருக்கான பிரெயில் வடிவிலான ஆவ ணங்களும் காதுகேளாத வாய் பேசாதோருக் கான செய்கைமொழி பெயர்ப்பாளர்களும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு பள்ளிகள் மற்றும் சிறப்பாசிரியர்கள் போதிய அளவில் இல்லாததும் இவர்களின் கல் விக்கு தடைகளாக உள்ளன. 2009ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் பெயரளவிற்கே ஊனமுற்றோரை உள்ளடக்கி யிருக்கிறது. பொதுப் பள்ளிகளில் ஊனமுற் றோருக்கும் கல்வி அளிக்க முறையான கட்டமைப்பும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் இல்லாத நிலைமையே நீடிக்கிறது. மருத்து வம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி களில் ஊனமுற்றோருக்கான இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் அவர்களைக் கொண்டு நிரப்பப்படாமல் ஏமாற்றப்படுவதும் நீடிக்கிறது.
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பில்லாமல் அவதியுறும் ஊனமுற்றோரின் எண்ணிக்கை 66 சதவீத மாக உள்ளது. அரசுத்துறைகளில் உள்ள ஊ மற்றும் னு பிரிவு ஊழியர் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறை 1977 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு 1996 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த சமவாய்ப்புச் சட்டத்திலும் வழிவகை செய்யப்பட்டது. ஆனால், அரசுத்துறைகளில் மாற்றுத்திற னாளி பணி நியமனம் என்பது 0.5 சதவீத மும், அரசு தொழிற்சாலை மற்றும் நிறுவனங் களில் 0.4 சதவீதம் என்ற மிக மோச மான அளவிலேயே உள்ளது. 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற விதி யை, தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இதன் பிரதிபலிப்பே கடந்த அக்.8 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பாகும். மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்திடவும், காலியாக உள்ள இடங் களை கண்டறிந்து மூன்று மாதங்களுக்குள் நிரப்பிடவும் உச்சநீதிமன்றம் மகத்தான தீர்ப்பை அளித்துள்ளது.
அடையாள சான்று அவலம்
சமீபத்தில் தில்லியில் மாற்றுத்திற னாளிகளுக்கு பொறுப்பான மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை அமைச்சர் குமாரி செல்ஜா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், நாட்டில் வாழும் மொத்த மாற்றுத்திறனாளிகளில் இதுவரை சுமார் 39 சதவீதம் பேருக்கே அடையாள சான்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இதுவும் 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகைப்படி மட்டுமே. இடதுசாரிகள் தலைமையில் ஆட்சி நடைபெறும் திரிபுரா மற்றும் கோவா மாநிலத்திலும் 100 சதவீத அடையாள சான்று வழங்கியிருப்பது போற் றத்தக்கது. மாறாக, காங்கிரஸ் தலைமை யிலான தில்லி மாநிலத்தில் கேவலமான நிலைமையில் 10.19 சதவீதம் பேருக்கும், வளர்ச்சியின் நாயகன் என அண்டப்புழுகை கார்ப்பரேட் மீடியாக்களில் அள்ளிவிட்டு உலா வரும் பெரும்முதலாளிகளின் பிராண்ட் நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் வெறும் 19.7 சதவீத மாற்றுத்திறனாளி களுக்கு மட்டுமே அடையாள சான்று வழங்கப்பட்டுள்ளதாக அரசின் அதிகாரப் பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரு கட்சியினரும் மீண்டும் ஆட்சிக்கு வந் தால் மாற்றுத்திறனாளிகள் நிலைமை எப் படி போகும் என்பதை யோசிக்க வேண்டும்?
தமிழகத்தில்
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சட்டப் படியான பங்கை தர மறுப்பதும் நீதிமன்றத் திற்கு சென்றுதான் வாங்க வேண்டிய நிலை மையே தமிழகத்தில் உள்ளது. குறிப்பாக, சத்துணவுத்துறை மற்றும் மின்வாரிய உத விப் பொறியாளர் பணி நியமனத்தில் உள்ள ஒதுக்கீட்டை நீதிமன்ற உத்தரவு அடிப்ப டையிலேயே பெற முடிந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும். போதாக்குறைக்கு சமூக பாதுகாப்பு அடிப்படையிலும் உதவித் தொகை அளிப்பதிலும் பல்வேறு கேவல மான கடும் விதிமுறைகளை திணித்து அவ திப்பட வைக்கும் நிலைமையே நீடிக்கிறது.
வளர்ந்து வரும் இயக்கம்
மாற்றுத்திறனாளிகளை மற்றவர்களுக்கு இணையாக மதிக்கச் செய்யவும், போராட்ட நடவடிக்கைகளின் மூலம் அவர்களின் உரிமைகளை பெற்றிட, இடதுசாரி எண்ணம் கொண்ட ஒரு வலுவான அமைப்பை உரு வாக்கிட கடந்த நான்காண்டு காலத்தில் எடுக்கப்பட்டுள்ள முயற்சி தமிழகத்திலும் தேசிய அளவிலும் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. தேசிய அளவில் ஊனமுற்றோருக்கான தேசிய மேடை அமைக்கப்பட்டு 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அமைப்பு ரீதியான செயல்பாட்டை உருவாக்க முடிந்துள்ளது. ஐ.நா. கன்வென்ஷன் விதிகள் அமலில் உள் ளதை, தொடர்ந்தப் போராட்டங்கள், தலையீடு கள் மூலம் உணர்த்தி உரிமைகளை பெறு வதில் முன்னேற முடிந்துள்ளது. குறிப்பாக மத்தியிலும், ஒரு சில மாநிலங்களிலும் தனி துறை, பல மாநிலங்களில் கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உறுதி, பார்வை யற்றவர்களுக்கு சிவில் சர்வீஸ் பதவிகள் பெற்றுத் தந்துள்ளது, இப்படி குறிப்பிட்ட வெற்றிகளை பெற முடிந்துள்ளது.
இப்படி போராட்ட வியூகங்களை அமைத்து மாற்றுத்திறனாளிகளின் வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கும் ஊனமுற் றோர் தேசிய மேடை- சூஞசுனுயின் முதல் அகில இந்திய மாநாடு டிச.6,7,8 தேதிகளில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில்(கொச்சி) நடைபெறுகிறது என்பது, இந்த உலக தினத் தில் நமக்கு இரட்டிப்பான செய்தியாகும். டிச-6 அன்று மாலை 3 மணிக்கு கொச்சி மரைன் டிரைவில் மாற்றுத்திறனாகளின் பிரம்மாண்டப் பேரணி மற்றும் பொதுக்கூட் டத்துடன் மாநாடு துவங்குகிறது. டிச-7,8 தேதிகளில் டவுன் ஹாலில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது.
நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 400 பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர். அரசியல் சாசனத்தில் மாற்றுத்திறனாளி களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உரிய திருத்தம் கோருவது, புதிய உரிமைகள் சட்டத்தை நாடாளுமன்றத்தில் உடன் நிறைவேற்ற வலியுறுத்துவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
“அனைவருக்குமான சமுதாயம் மற்றும் முன்னேற்றம் கண்டிட தடைகளை தகர்ப் போம், கதவுகளை திறப்போம்” என்ற இந்த உலக தினத்திற்கான கருப்பொருளுக்கு ஏற்ப எர்ணாகுளம் மாநாடு அமையும். அதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் மாற்றுத்திறனாளிகள் இயக்கம் எதிர்பார்க்கிறது. கட்டுரையாளர் : மாநில செயலாளர், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்
No comments:
Post a Comment