தேசிய கல்வியியல் பல்கலைக்கழகம் மாநிலங்களிடையேயான கல்வித்தரப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் குஜராத் மாநிலம் கடும் வீழ்ச்சியடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
தொடக்கக் கல்வி நிலையில் இந்திய அளவில் 9ஆம் இடத்தில் இருந்து வந்த குஜராத் மாநிலம் பின்னடைவு கண்டு 18 இடத்தைப் பெற்றுள்ளது.
மேலும், உயர்நிலைக் கல்வியிலும் 8 ஆவது இடத்திலிருந்து 14 ஆம் இடத்திற்கு குஜராத் சரிந்துவிட்டதாக அப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்த அளவில் அது தனது மூன்றாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
24 ஆவது இடத்திலிருந்த மணிப்பூர் மாநிலம் 9 ஆம் இடத்திலும், 19 ஆம் இடத்திலிருந்த மிசோரம் 10 ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ளன. டெல்லி ஆறிலிருந்து 11 ஆம் இடத்துக்கும், கேரளா ஏழாம் இடத்திலிருந்து 14 ஆம் இடத்திற்கும் இறங்கியுள்ளன.
நன்றி : http://indru.todayindia.info
No comments:
Post a Comment