தேனி மாவட்டத்தில், ஒயிட்னர் எனப்படும் மை அழிக்கும் திரவத்தை தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் சில மாணவர்கள், பள்ளி நேரத்தில் பள்ளியை விட்டு வெளியில் வந்து சினிமா தியேட்டருக்கு செல்வது, மது அருந்துவது, ஆறு மற்றும் குளங்களில் குளிப்பது உள்ளிட்ட பல தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது இந்த மாணவர்கள் ஒயிட்னர் எனப்படும் மை அழிக்கும் திரவத்தினை கைக்குட்டைக்குள் வைத்து, நுகர்கின்றனர். இதனால் அவர்களுக்குள் ஒருவித போதை ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் அவர்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதுடன் இதனால் சமூகமும் சீர்கெடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாணவர்களின் எதிர்கால நிலையினையும், சமுதாயத்தினையும் கருத்தில் கொண்டு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, ஒயிட்னர் தயாரித்து விற்பனை செய்ய தடை விதிக்க அறிவுறுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் ஒயிட்னர் தயாரிக்கவும், விற்பனை செய்திடவும் தேனி கலெக்டர் பழனிச்சாமி தடைவிதித்துள்ளார், இதனை அனைத்து தரப்பினரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment