Latest News

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அப்பாவிகள் கைது: மனித உரிமை கமிஷன் வழக்கு பதிவு!


பெங்களூர் மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட 3 இளைஞர்களுக்கு ஆதரவாக மனிதஉரிமை கமிஷன் வழக்கு பதிந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ.க அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட நிரபராதிகளான 3 இஸ்லாமியர்களை ஆறு மாதங்களுக்கு பிறகு ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுவித்த சம்பவத்தில் கர்நாடகா போலீஸ் மீது அம்மாநில மனித உரிமை கமிஷன் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவுச் செய்துள்ளது.

இவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு சிபாரிசுச் செய்யுமாறு முதன்மை செயலாளருக்கு மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

நோட்டீஸ் கிடைத்து ஒரு மாதத்திற்குள் இழப்பீட்டை வழங்கவேண்டும் என்று மாநில மனித உரிமை கமிஷன் உறுப்பின் சி.ஹெச்.ஹுனுகட் முதன்மைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.

மேலப்பாளையம் பீர் முஹ்யத்தீன், சதாம் ஹுஸைன், தென்காசி ஹனீஃபா ஆகியோர் குற்றவாளிகள் அல்லர் என்று கூறி விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதமாக பெங்களூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களுக்கு, குண்டுவெடிப்பில் தொடர்பை நிரூபிக்க போலீஸால் முடியவில்லை.

நிரபராதிகளை தீவிரவாதத்தின் பெயரால் சிறையில் அடைத்தது புலனாய்வு அதிகாரிகளின் கடுமையான தவறு என்று மனித உரிமை கமிஷன் கூறுகிறது.

தேவையில்லாமல் கைது செய்யப்பட்டு சித்திரவதைச் செய்யப்படும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடுகள் வழங்க அரசுகளுக்கு சட்டரீதியாக தடைகள் ஏதுமில்லை என்றும் இழப்பீட்டிற்காக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுக உரிமை உண்டு என்றும் மனித உரிமை கமிஷன் சுட்டிக்காட்டியுள்ளது.

தீவிரவாதிகள் என்று ஊடகங்கள் பெரிது படுத்தி செய்தி பரப்பும் அளவிற்கு இவர்களை போன்றவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபணம் ஆகும்

போது பெரிது படுத்தி செய்தி வெளி யிடுவது இல்லை என்பதே மிக வருத்தப்படவேண்டிய விடையம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.