சென்னை: மதுரையில் இருந்து சென்னைக்கு ரயிலில் செல்ல ஆகும் செலவை விட சென்னையில் நகரத்திற்கும் ஆட்டோவில் பயணம் செய்ய அதிக செலவாகும். அந்த அளவிற்கு அடித்து பிடித்து கறந்து விடுவார்கள். கேட்டால் வாரா வாராம் பெட்ரோல், டீசல் விலை ஏறுகிறது நாங்க என்ன செய்வது என்பதுதான் ஆட்டோ டிரைவர்களின் வாதம். ஆட்டோக்களுக்கு கண்டிப்பாக கட்டணம் நிர்ணயம் செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றமே உத்தவிட்டு இது தொடர்பாக பதிலளிக்காத தமிழக அரசுக்கு 10000 ரூபாய் அபராதமும் விதித்தது.
இதனையடுத்து ஆட்டோவுக்கு புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை தலைமை செயலகத்தில் சனிக்கிழயன்று நடந்தது. இதில், ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 எனவும், அடுத்தடுத்து கி.மீ 15 நிர்ணயிக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. விரைவில் நிர்ணயித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment