தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள பொன்னவராயன்கோட்டை உக்கடை கிராமத்தில் வசிப்பவர் ராசேந்திரன். லாரி ஓட்டுநர். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி என்ற பெண்ணுடன் திருமனம் நடந்தது.
கடந்த பல மாதங்களாகவே கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் மனைவி செல்வியின் நடத்தையில் ராசேந்திரனுக்கு சந்தேகம் வந்தது.
சம்பவத்தன்று இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். ஆத்திரமடைந்த கணவன் ராசேந்திரன் செல்வியை சந்தேகத்துடன் பேசியதுடன் அருகில் இருந்த மண்ணெண்ணெய்யை செல்வி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
தீயின் எரிச்சலால் துடித்த மனைவியை கணவனே உறவினர்கள் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்த நிலையில் செல்வி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராசேந்திரனை பட்டுக் கோட்டை போலிசார் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment