அன்பார்ந்த சகோதர (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
இறைவனின் பேரருளால் நம் வாழ்வில் இன்னொரு ரமதானை நெருங்கி விட்டோம். இம்மாதத்தில் நம்மால் இயன்ற அளவு நம்மைப் படைத்தவனை நெருங்கவும், நம்மை பாவங்களிலிருந்து தூய்மையாக்கிக் கொள்ளவும் பகலில் நோன்பிருத்தல், அதிகமாக குர் ஆன் ஓதுதல், இரவில் உறக்கம் துறந்து தொழுகையில் ஈடுபடுதல், போன்ற அனைத்து வணக்கங்களிலும், இன்ஷா அல்லாஹ் நம்மை நாம் தயார் படுத்திக் கொள்வோம்..
அல்ஹம்துலில்லாஹ்! கடந்த வருடம் அமீரகதில் மேலத்தெரு முஹல்லா சகோதரர்களிடம் வசூலித்த பித்ரா தொகையினை நமது முஹல்லாவில்யுள்ள தேவையுடைய ஏழை மக்களுக்கு முறையாக வினியோகம் செய்தோம்மென்பது தங்கள் அனைவரும் அரிவீர்கள். எப்பொழுதும் போல் இந்த வருட ரமளான் மாத்திற்கான பித்ரா தொகையை வசூல் செய்து நமது முஹல்லா வாசிகளுக்கு வினியோகம் செய்ய இருப்பதாள் உங்களின் பித்ரா தொகையை நமது TIYA நிர்வாகிகள் உங்கள் ரூம்களை நோக்கி வருகிறார்கள் அவர்களிடம் தாமதம் இல்லாது உடன் தங்களின் பித்ரா தொகையை செலுத்தினால் தாயகத்தில் நமது முஹல்லாவில்யுள்ள தேவையுடைய ஏழை மக்களுக்கு முன் கூட்டியே வினியோகம் செய்வதற்க்கு வசதியாக இருக்குமென்பதாள் உங்களின் பித்ரா நிதியை வாரி வழங்கிடவும்.
நிர்வாகம்
TIYA - அமீரகம்
No comments:
Post a Comment