சீர்காழி அருகே உள்ள கோவில் பத்து பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர். அபிபுல்லா (வயது40). இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். அபிபுல்லாவின் மனைவி அர்ஜனாபேகம் (35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
அர்ஜனாபேகம் கடந்த ஏப்ரல் மாதம் 20-ந்தேதி குழந்தைகளுடன் துபாய் சென்று விட்டார்.
இதைத்தொடர்ந்து அவரது வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கடந்த 17-ந்தேதி அவரது வீட்டின் மாடி ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த டி.வி. மற்றும் டி.வி.டி. பிளேயர், தையல் மிஷின், ஹோம் தியேட்டர் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.
இதுபற்றி அறிந்த அர்ஜனா பேகத்தின் உறவினர்கள் லியாகத்அலி, சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் புயல் பாலச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோவில்பத்து பகுதியில் சந்தேகத்துக்குகிடமாக நடமாடிய தாடவன் காமராஜகிரிபுரத்தை சேர்ந்த தமிழரசன் (22). கோவில்பத்தை சேர்ந்த ஆதித்யா (23). மணிகண்டன் (22). ஆகிய 3 பேரை சீர்காழி போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் தான் வீடு புகுந்து பொருட்களை திருடியது தெரிய வந்தது. அதன்பேரில் அவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் திருடிய டி.வி. மற்றும் பொருட்களை மீட்டனர். இதில் தமிழரசன், ஆதித்யா ஆகியோர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் என்பதும், மணிகண்டன் கொத்தனார் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. மணிகண்டன் கொடுக்கும் தகவலின் பேரில் கல்லூரி மாணவர்கள் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மாணவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொள்ளையர்களாக செயல்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
No comments:
Post a Comment