மனித உயிர்கள் உருவாகும் இடம், கருப்பை. பெண்களிடம் இருக்கும் அற்புதங்கள் நிறைந்த இந்த இனப்பெருக்க உறுப்பு, பெண் உறுப்பின் கடைசி பகுதியில் தசைக் கோளம் போல் அமைந்தி ருக்கிறது. இதன் மொத்த நீளம் 7.8 செ.மீ! அகலம் 5.6 செ.மீ! பருமன் 3.4செ.மீ! கருப்பையின் மேல் பாக ம் அகன்று காணப்படும். இதற்கு `பண்டஸ்’ என்று பெயர். கீழ்ப் பகுதியை கருப்பையின் வாய் என்று கூறுவோம்.
இது குறுகி காணப்படும். கருத்தரித்தல், கருவை தன்னோடு இணைத்து வளர்த்தல், குழந்தையாக வளர்த்தெடுத்து பிரசவிக் கச் செய்தல் போன்றவை எல்லாம் கருப்பையின் பணிகள். கருப்பையானது முதலில் இரு பகுதியாக காணப்படும். நடுவில் தடுப்பு ச்வர் போன் றிருக்கும். நாளடைவில் அந்த சுவர் பகுதி மறைந்து, ஒன்றாகி கருப்பை முழு வளர்ச்சி பெறும். சிலருக்கு அந்த சுவர் பகுதி மறையாமல் அப்படியே இருந்து விடும்.
அப்படிப்பட்ட பெண்களுக்கு கர்பம் தரிப் பதே பிரச்சினையாகி விடும். தற் போது கர்பிணி பெண்கள் மத்தியில் இருக்கும் கவலைக் குரிய விஷயம், ` செர்விக்கல் இன் கான்பிடன்ஸ்’! இந்த பாதிப்பு கொண்ட கர்பிணிகளுக்கு குறிப்பிடத்தக்க விதத்தில் எந்த அறி குறியும் இல்லாமல் 16 முதல் 20 வாரங்களான கரு, அப்படியே உயி ருடன் வெளியேறி விடும். 95 சதவீதம் அளவிற்கு வளர்ந்திருக்கும் அந்த சிசு, திடீரென்று வெளியேறுவது தாய்க்கு மிகுந்த அதிர்ச்சி யை உருவாக்கும்.
சிலருக்கு கழிவறையை பயன்படுத்தும்போ து கூட சிசு வெளியேறி உள்ளது. கருப்பை வாய் பலகீனமாக இருப்பதே இந்த பாதிப்பு க்கு முக்கிய காரணமாகும். சில பெண்களு க்கு பிறவியிலேயே கருப் பைவாய் பலகீன மாக இருக்கும். அடிக்கடி அபார்ஷன் ஆவது மூல மும் கருப்பை வாய் பலகீனமாகும். கர்பிணி களுக்கு நிறைமாதம் ஆகும்போது இயல்பாக கருப்பை சுருங்கி விரியும். அப்போது கருப்பை வாயும் அதற்கேற் றாற்போல் செயல்பட்டு வழி விடும்.
குழந்தையை வெளியேற்று வதற்காக நடக்கும் இந்த செயலை நாம் பிரசவ வலி என்போம். செர் விக்கல் இன்கான்பிடன்ஸ் ஏற்படு கிறவர்களுக்கு, 16-20 வாரத்திலே எந்த வலியும், அறிகுறியும் இல்லா மல் கருப்பை வாய் திறந்துவிடும். குழந்தை அப்படியே வெளியே வந்து விழுந்துவிடும். பத்தாயிரத் தில் ஒரு கர்பிணி இந்த பாதிப்பி ற்கு உள்ளாகிறார்.
முதல் குழந்தையை நார்மலாக பிரசவித்த தாய்மார்கள்கூட இர ண்டாவது கர்ப்பத்தில் இந்த பாதிப்பிற்கு உள்ளாகலாம். இந்த மாதி ரி பாதிப்பிற்குள்ளாகும் பெரும் பாலா ன பெண்களுக்கு காரணம் என்னவென்றே தெரியாது. அதனால், `நான்காவது மாத த்தில் தனக்கு திடீரென்று அபார்ஷன் ஆகிவிட்டது’ என்று கூறு வார்கள். இதை கண்டுபிடித்து சிகிச்சை அளித்து, கர்பத் தில் இருக்கும் சிசுவை காப்பாற்ற முடியு ம்.
பொதுவாக கருப்பை வாயின் நீளம் 3 முதல் 4.5 செ.மீ. வரை இரு க்கும். கர்பமான 3-வது மாதத்தில் இதன் அளவு 2.7 செ.மீ.க்கு குறை வாக இருந்தால் அதை கவனிக்க வேண் டும். இந்த அளவு வித்தியாசத்தை கண்டறி ந்து, கருப்பை வாயின் பலத்தையும் கண் டறிய 15-வது வாரத்தில் கர்பிணியை ஸ்கேன் செய்ய வேண்டும்.
`ஸ்கேனிங்கில்’ கருப்பை வாயின் அளவு பிரச்சினைக்குஉரிய வித த்தில் இருந்தால் `மேக்டோனால்ட் ஸ்டிச்’ என்ற உள் தையல் போட வேண்டும். 16 முதல் 18 வார த்தில் கருப்பை வாயில் இந்த தையல் போடப்படும். இதன் மூலம் செர்விக்கல் இன்கான் பிடன்ஸ் பாதிப்பின்றி ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்க முடியும். சில பெண்களுக்கு கர்பம் தரி ப்பதில் தொடர்ந்து பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும்.
காரணத்தை கண்டறிய பல்வேறு பரிசோ தனைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்படு வார்கள். அப்போது கருப்பையின் பலமும், கருப்பை வாயின் நிலையும் ஆராயப்பட வேண்டும். பாரம்பரிய ரீதியாக கருப்பை வாய் குறைபாடுகொண்ட பெண்களும் குறைந்த சதவீத அளவில் உள்ளனர். இது போன்ற பெரும்பாலான பிரச்சினைகளுக் கு நவீன மருத்துவம் தீர்வு தருகிறது.
நன்றி : புதிய தலைமுறை
No comments:
Post a Comment