அதிரையில் வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் [ ATCO ] சார்பில் கடந்த [28-04-2013 ] அன்று முதல் பொருட்காட்சியை நடத்தி வருகின்றனர். இதில் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்கள் குடும்பத்தினருடன் வருகைதந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.
பொருட்காட்சிக் குறித்து பார்வையாளர்கள் - வர்த்தகர்கள் - ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரின் கருத்துகளோடு, பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ள வர்த்தக நிறுவனங்களின் ஸ்டால்கள், உணவகங்கள், பொதுமக்களை மகிழ்வித்து வரும் ராட்சஸ ராட்டணங்கள், ஊஞ்சல்கள், உயர்ந்த மனிதன், அபூர்வ விலங்கினங்கள் மற்றும் பறவைகள் சிறுவர் சிறுமிகளின் விருப்பமாகிய குதிரை சவாரி, ஒட்டக சவாரி ஆகியன காணொளியில் இடம்பெற்று உள்ளது.
No comments:
Post a Comment