அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ] சார்பாக மிகப்பெரிய அநியாயமான ஷிர்க்கிலிருந்து மக்களை எச்சரிக்கும் மாபெரும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் தக்வாப் பள்ளி அருகே இன்று [ 06-05-2013 ] மாலை 7 மணியளவில் நடைபெற்றது.
சிறப்பு பேச்சாளர்களாகக் கலந்து கொண்ட மவ்லவி அன்சர் ஹுசைன் ஃபிர்தெளஸி அவர்கள் 'அவ்லியாக்கள் இறை நேசர்களே' என்ற தலைப்பிலும், மவ்லவி அன்சர் ஃபிர்தெளஸி அவர்கள் ‘இஸ்லாத்தின் பார்வையில் பரிந்துரை’ என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பெண்களுக்கு என தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சிகுரிய ஏற்பாடுகளை அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக அதன் நிர்வாகிகள் சிறப்பாக செய்துருந்தனர்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment