அஸ்ஸலாமு அலைக்கும்.
1. பெண்களுக்கான தடுப்பு அல்லது சிறப்பு நேரம் அல்லது 'பெண்கள் மட்டும்' நாள் ஆகிய ஏதேனும் ஒன்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
கடந்த ஒருமாத காலமாக அதிரையின் சாலைகளில் 'வர்த்தக, கலாச்சார விழா' நடக்கப் போவதாக ஃப்ளக்ஸ் விளம்பரங்கள் அறிவித்தன.
என்ன? எங்கு? எப்போது? என்பன பரம இரகசியமாக இருந்தன.
ஏப்ரல் இறுதி வெள்ளியில் விபரங்கள் வெளிவந்தன. கற்றோர் பலர் அதில் பொறுப்பு வகிப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அதிரையில் 'பெருஸ்ஸ்ஸ்ஸா' ஏதோ மாற்றம் வரப்போகிறது என்று பலரும் நம்பியதுபோல் நானும் நம்பினேன்.
அது எத்துணை மடத்தனம் என்பது 28.4.2013 மாலை தெரியவந்தது.
படித்தவர்கள் நடத்திய 'கலைச் சேவை'களை வீடியோவில் பார்த்து மனம் கனத்தது.
என்னைப் போலவே ஏமாறிப்போன சகோதரர்களுள் ஒருவரான'மீடியா மேஜிக்' நிஜாமுத்தீன், 'வர்த்தகமாம்லோ ...' என்ற எண்ணத்தில் ஒரு ஸ்டால் போட்டிருந்தார். அது புத்திசாலித்தனமா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால்,அங்குள்ள அரங்கத்தில் நடைபெற்ற அசிங்கங்களை வீடியோ எடுத்துப் பத்திரப்படுத்தியது வெகு புத்திசாலித்தனம்.
இத்தனைக்கும் அரங்கக் கலை(?) நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெறப்படவில்லை என்ற தகவலையும் அவர் நேற்று காவல் நிலையத்திலிருந்து தெரிந்து வந்து சொன்னார்.
அரங்கம், அசிங்கங்களை அரங்கேற்றிய முதல் நாளே விழாவின் ஜாயிண்ட் செக்ரட்டரி செய்யது அஹ்மது கபீர் அவர்களை சந்தித்துத் தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறார் சகோ. நிஜாமுத்தீன். "சரி, சரி! பாட்டுகளைக் குறைத்துக் கொள்ளலாம்" என்ற அறிவுசீவித்தனமான பதில் கிடைத்திருக்கிறது. என்றாலும் அடுத்தடுத்த நாட்களில் அரங்கம் தொடர்ந்து அசிங்கமாகிக் கொண்டே வந்தது.
நேற்று 2.5.2013இல் அதிரை உலமாக்கள் சபை, கலாச்சாரத்தை(!) அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் பெரும் பொருட்செலவில் கலாச்சாரப் பொரட்சி நடைபெற்று வருவதால் "அரங்க நிகழ்ச்சிகளை நிறுத்தமுடியாது; யோசித்துச் சொல்கிறோம்" என்றெல்லாம் முட்டுக் கொடுக்கப்பட்டதை அறிந்த சகோ. நிஜாமுத்தீன் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் அனுப்பினார் (இணைப்பு).
இன்று மாலை ஐந்து மணியளவில் மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக் குழுவொன்று அதிரைக்கு வந்து,விழா இடத்தை ஆய்வு செய்யத் தொடங்கியது.
ஆய்வுக் குழுத் தலைவர் அழைத்ததன் பேரில் சகோ. நிஜாமுத்தீனோடு நானும் தம்பி ஜமாலுத்தீன் புகாரியும் விழாக் குழுவினரின் அலுவலகத்துக்குச் சென்றோம். "கோரிக்கைகள் யாவை?" எனக் கேட்டபோது,
1. பெண்களுக்கான தடுப்பு அல்லது சிறப்பு நேரம் அல்லது 'பெண்கள் மட்டும்' நாள் ஆகிய ஏதேனும் ஒன்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
2. கலாச்சாரக் கேடு விளைவிக்கும் அரங்க நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட வேண்டும்
3. தீயணைப்பு வண்டிகள் வேண்டும்.
3. தீயணைப்பு வண்டிகள் வேண்டும்.
4. ஆம்புலன்ஸ் வண்டி தயார் நிலையில் வேண்டும்.
5. பலமான பாதுகாப்பு ஏற்பாடு (செக்யூரிட்டி) வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை எழுதிக் கொடுத்து சகோ. நிஜாமுத்தீன் கையொப்பம் இட்டுக் கொடுத்தார்.
"பாட்டு, கூத்து, நாடகம் இனி அரங்கத்தில் நடக்காது. மற்றவை அனைத்தும் உடனடியாக ஏற்பாடு செய்யப்படும்" என அதிகாரி உறுதியளித்தார்.
"தடை செய்யப்பட வேண்டியவை இன்னும் வேறு பல இருக்கின்றன. சந்திப்போம்" எனக் கூறி விடைபெற்று மக்ரிபுத் தொழுகைக்கு விரைந்தோம்.
கடைசி நேரத்தில்தான் தெரியவந்தது. வந்த அதிகாரி நிஜாமின் காலேஜ்மேட்டாம்.
ஜமீல் M ஸாலிஹ் . நன்றி : அதிரைநிருபர்
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteமாஷா அல்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ஆட்சியார் வரைக்கும் எடுத்து சென்ற தம்பி நிஜாம் மற்றும் அவருக்கு உறு துனையாக நின்ற அனைவரும். அல்லாஹ் விடம் நாம் அனைவரும் பிராத்தனை செய்வோம்.
அன்புடன் : N.முகமது மாலிக்
அபுதாபி