பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அழைக்கும் [ வரஹ் ]
‘ஊர் ஒற்றுமையாக இருந்தால் எவற்றையெல்லாம் சாதிக்கலாம் ?’என்ற தலைப்பிலும் மற்றும் ‘நம் பிள்ளைகளை எப்படி வளர்த்தால் அவர்கள் நம் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாக ஆவார்கள்’ என்ற இரு தலைப்புகளிலும் இன்ஷா அல்லாஹ் நாளை [ 28-05-2013 ] செவ்வாய்க் கிழமை மாலை 5 மணி முதல் நமதூர் செக்கடி பள்ளியின் வளாகத்தில் நடைபெற இருக்கின்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், இலங்கை நாட்டைச் சார்ந்த தலைசிறந்த பேச்சாளர் அஷ் ஷைய்கு முஃப்தி முகம்மது யூசுப் அவர்கள் நம்மிடையே பேச இருக்கிறார்கள்.
சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக்கூட்டத்தில் பெண்களுக்கு என தனி இட வசதியும் செய்யப்பட்டுள்ளது.
சம்சுல் இஸ்லாம் சங்கம்
புதுமனைத்தெரு - அதிரை
No comments:
Post a Comment