அதிரையில் வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் [ ATCO ] சார்பில் கடந்த [28-04-2013 ] அன்று முதல் பொருட்காட்சியை நடத்தி வருகின்றனர். இதில் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்கள் குடும்பத்தினருடன் வருகைதந்து பார்வையிட்டுச் சென்றனர்.
கடந்த 15 நாட்களாக நடைபெற்ற பொருட்காட்சி இன்றைய இறுதி நாளன்று 3000 த்துக்கும் மேற்பட்டோர் பங்களிப்புடன் இனிதே நிறைவுபெற்றது. இந்த பொருட்காட்சி சிறப்பாக நடந்திட அனைத்து விதத்திலும் ஒத்துழைத்து ஆலோசனை வழங்கியோருக்கும் மற்றும் பொருட்காட்சியில் பங்கெடுத்துக் கொண்டோருக்கும் இதற்கும் மேலாக பொருட்காட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த ஏற்பாட்டாளருக்கும் என அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் வழங்கி மேடையில் கெளரவிக்கப்பட்டது.
நன்றி : அதிரைநியூஸ்

No comments:
Post a Comment