அதிரை பேரூராட்சியின் புதிய நிர்வாகம் பொறுப்புக்கு வந்து ஒரு ஆண்டைக் கடந்து இரண்டாம் ஆண்டை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வருகின்ற அதிமுக கட்சியின் பிரதிநிதிகளும், அதே போல் தமிழகத்தில் முக்கிய எதிர்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக கட்சியின் பிரதிநிதிகளும் அதிரை பேரூர் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் இடம்பெற்று சமூகப்பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2011 ம் ஆண்டு நடந்த அதிரை பேரூர் மன்ற உள்ளாட்சித் தேர்தலில் கடும் போட்டியில் வெற்றிவாய்ப்பை குறைந்த எண்ணிக்கையில் இழந்த அதிமுக பிரதிநிதியும், சமூக ஆர்வலருமாகிய அதிரை அஜீஸ் அவர்களை 'அதிரை நியூஸ்' சார்பாக அணுகி அதிரை பேரூராட்சியின் செயல்பாடுகள் மற்றும் அதன் பணிகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து கருத்துகளைப் பெற்றோம்.

No comments:
Post a Comment