மேலத்தெரு மகிழங்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள சண்முகம் டீ கடை அருகில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் அரிக்கப்பட்டு கீழே விழுந்து சாயும் நிலையில் இருந்தது. இந்த கம்பத்தில் 10க்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தன.
பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றியமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை கடந்த [ 17-02-2013 ] அன்று தளத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
இதற்கு வலு சேர்க்கும் விதமாக 'மனித உரிமை ஆர்வலர்' KMA. ஜமால் முஹம்மது மற்றும் இந்தப்பகுதியின் 16-வது வார்டு கவுன்சிலர் முஹம்மது யூசுப் அவர்களிடமும் வேண்டுகோள் விடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று [ 14-05-2013 ] காலை கீழே விழும் நிலையில் இருந்த பழைய போஸ்ட் மரத்தை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் புதிய போஸ்ட் மரம் நடப்பட்டது. இதனால் இந்தப்பகுதியில் சுமார் 1-1/2 மணி நேரம் மின்சார துண்டிப்பு செய்யப்பட்டு இருந்தது.
துரித நடவடிக்கை மேற்கொண்ட அதிரை மின்சார வாரிய அலுவலர் AE பிரகாஷ் மற்றும் அதன் ஊழியர்கள், அதோடு மட்டுமல்லாமல் இவற்றை மின்சார வாரியத்தின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற 'மனித உரிமை ஆர்வலர்' KMA. ஜமால் முஹம்மது, 16-வது வார்டு கவுன்சிலர் முஹம்மது யூசுப் ஆகியோருக்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொண்டனர்.
[ போஸ்ட் மரம் - பழையது ]
[ போஸ்ட் மரம் புதியது ]
ஒவ்வொரு நாளும் அஞ்சிக்கொண்டிருந்த இந்த மின்கம்ப செய்தியை தளத்தில் பதிந்து கவனத்திற்கு கொண்டு வந்த அதிரை நியூஸ்சிற்க்கும் உடனே துரித நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பத்தை மாற்ற உதவி செய்த மனித உரிமைக்காவலர் ஜமால் காக்காவிற்க்கும், இதற்க்கு உதவியாய் இருந்து செயல்பட்ட 16-வது வார்டு கவுன்சிலர் முஹம்மது யூசுப் அவர்களுக்கும், உடனே சுணங்காமல் புதிய மின்கம்பத்தை மாற்றி கொடுத்த அதிரை மின்வாரியத்திற்கும்,எனது மனமார்ந்த நன்றியினை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
ReplyDelete