Latest News

சவுதி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சலுகைகள்


freevisa

ஃபிரி விஷா, கூலிக்கபில் ஆகிய பட்டியலில் உள்ளவர்கள் இப்போதுள்ள சலுகையை பயன்படுத்திக் கொள்ள தனது பாஸ்போர்ட்டை பெறுவதற்கு பெரும் தொகையை கொடுப்பதாக கேள்விப்படுகிறோம்.
நேற்று ஒருவர் 16 ஆயிரம் ரியால் கொடுத்து கபிலிடம் தனாஜில் வாங்கிதாகச் சொன்னார், ஒருவர் 6 ஆயிரம் ரியால் கொடுத்து தானஜிலுக்கு பாஸ்போர்ட் வாங்கியதகவும், 4 ஆயிரம் ரியால் கொடுத்து பாஸ்போர்ட்ட வாங்கியதாகவும் சகோதரர்கள் சொல்கிறார்கள்.
விபரம் தெரியாமலும் அறியாமையிலும் நம் சகோதரர்கள் பல ஆயிரம் ரியால்களை கூலிக்கபிலிடம் கொடுத்து ஏமாறுகிறார்கள்.
சகோதரர்களே நீங்கள் கபிலிடம் பணம் கொடுப்பதற்கு முன் தயவு செய்து நம்மைப் போன்ற தூதரகத்தில் பதிவு செய்யப்பட்ட தொண்டர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். புதிய விதியின் படி யாருக்கும் ஒரு பைசா கொடுக்க வேண்டியதில்லை. கொடுக்கவும் வேண்டாம்.
தானஜில் மாற்றுவதற்கு உங்கள் கபில் பாஸ்போட்டை தராவிட்டாலும் நீங்கள் தனாஜில் மாறிக் கொள்ளலாம் நமது தூதரகத்தின் மூலம் நீங்கள் வேறு பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளமுடியும்.
தனாஜில் மாற விருப்பம் இல்லையா? நீங்கள் தாயகம் செல்ல வேண்டுமா? உடனே தூதரகத்தில் பதிவு செய்யுங்கள், தூதரத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் விரைவில் வழங்கப்படவிருக்கும் EC மூலம் தாயகம் செல்லலாம். அந்த EC யை வைத்து நீங்கள் தாயகத்தில் வேறு பாஸ்போர்ட் எடுத்துக் கொள்ள முடியும்.
EC மூலம் செல்பவர்கள் மீண்டும் சவூதி அரேபியா வரமுடியாதே என்று பயப்படுகிறார்கள். பயப்படத்தேவையில்லை சகோதரர்களே மீண்டும் சவூதிக்கு வரலாம் புதிய விதியின் படிஎந்தத் தடையும் இல்லை.
எந்த சந்தேகமாக இருந்தாலும் எப்பொழுதும் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகள் வழங்க நாம் தயாராக உள்ளோம்.
Hussain Ghani
President, TMMK,
Central Region,Riyadh – Saudi Arabia.
+966 502929802, +966 549977929.

சவுதி அரசாங்கத்தால் 10.05.2013 அன்று அறிவிக்கப்பட்ட சலுகைகளின் குறிப்பிட்ட விவரங்கள்.
சவுதி அரசால் அறிவிக்கப்பட்ட சலுகை காலம் 03.07.2013 அன்று முடியும் முன்பாக, சலுகைகளை பயன்படுத்தி தங்கள் நிலையை சரி செய்து கொள்ளுமாறு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டவர்களை சவுதி உள்துறை, தொழிலாளர் அமைச்சகங்கள் கேட்டு கொள்கின்றனர். சலுகை காலம் முடிந்த பிறகு உடனே அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற் கொண்டு சட்டத்தை மீறும் நிறுவனங்கள், வெளிநாட்டவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். இது சம்பந்தமான சலுகைகள் பின் வருமாறு:
  • 1. சவுதி அரேபியாவில் தொடர்ந்து பணி புரிய விரும்பும் வெளி நாட்டவர் அபராதமும் சிறை தண்டனையும் இன்றி சலுகை காலத்தில் தங்கள் நிலையை சரி செய்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இது 6.4.2013 க்கு முன்பாக விதிகளை மீறியவர்களுக்கு பொருந்தும்.
  • 2. சலுகை காலம் முடியும் முன்பாக தாயகம் திரும்பும் பணியாளர்களின் விரல் ரேகைகள் எடுக்கப்பட்டு அவர்கள் தண்டனை, அபராதம் மற்றும் இகாமா கட்டணம் இன்றி நாடு திரும்ப அனுமதிக்கபடுவர். இந்த முறையில் நாடு திரும்புவோரின் விரல் ரேகைகள் எடுக்கப்பட்டாலும், அவர்கள் சவுதி அரேபியா மீண்டும் திரும்பி வர அனுமதிக்கபடுவர்.
  • 3. சட்ட விரோதமாக சவுதி அரேபியாவிற்குள் வந்தவர்களுக்கு சலுகை கால விதி முறைகள் பொருந்தாது.
  • 4. தங்கள் சவுதி எஜமானரிடம் இருந்து ஓடிப்போனவர்கள்(ஹுரூப்) மற்றும் இகாமா இல்லாதவர்கள், சலுகை காலம் முடியும் முன்பு தங்கள் எஜமானரிடம் வேலைக்கு திரும்பவோ அல்லது வேலையை இன்னொருவருக்கு மாற்றிக்கொள்ளவோ அனுமதிக்கபடுவர். இது சம்பந்தமான வழக்குகள் நீதி மன்றத்தின் மூலமாக தீர்க்கப்படும். இது சம்பந்தமான விதி முறைகள் :
பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளகள் உள்ள நிறுவனங்கள் புதிய பணியாளர்களை சேர்ப்பதன் மூலமாக பச்சை நிற நிலையில் இருந்து கீழே செல்ல இயலாது.
ஒன்பது பணியாளர்கள் அல்லது அதற்கு குறைவாகவும் குறைந்தது ஒரு சவுதி பிரஜை உள்ள சிறிய பச்சை நிற நிறுவனங்கள், நான்கு பணியாளர்களுக்கு மேல் சேர்த்துக்கொள்ள அனுமதி இல்லை. புதிய பணியாளர்களை சேர்த்த பின்னரும் இந்த சிறிய நிறுவனங்களின் மொத்த பணியாளர் எண்ணிக்கை அதிக பட்சமாக ஒன்பது மட்டுமே இருக்கலாம்.
  • 5. தங்களுடைய சவுதி எஜமானரிடம் இருந்து ஓடிச்சென்ற(ஹுரூப்) வீட்டு பணியாளர்கள் அல்லது இகாமா இல்லாத வீட்டு பணியாளர்கள் தங்களுடைய முதல் எஜமானரிடம் திரும்பி வேலைக்கு செல்லவோ அல்லது வேறு ஒரு சவுதி எஜமானரிடம் வேலையை மாற்றி கொள்ளவோ அனுமதிக்கபடுவர். இது சம்பந்தமான வேலைகள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் (ஜவசாத்) செய்யப்படும். மேலும் இவர்கள் தங்கள் முதல் எஜமானரின் அனுமதி இன்றி தங்கள் வேலையை ஒரு தனியார் நிறுவனத்திற்கும மாற்றிகொள்ளலாம். வேலையை மாற்றுவதற்கான வரைமுறைகள் பின் வருமாறு :
 ஒரு சவுதி குடும்பத்தின் மொத்த வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை நான்கிற்கு மேல் இருக்கக் கூடாது.
புதிய வீட்டுப் பணியாளர்களை சேர்ப்பதன் மூலம் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளார்கள் உள்ள பச்சை நிற நிறுவனங்கள் பச்சை நிற நிலையில் இருந்து கீழே வரக் கூடாது.
ஒன்பது பணியாளர்கள் அல்லது அதற்கு குறைவாகவும் குறைந்தது ஒரு சவுதி பிரஜை உள்ள சிறிய பச்சை நிற நிறுவனங்கள், நான்கு பணியாளர்களுக்கு மேல் சேர்த்துக்கொள்ள அனுமதி இல்லை. புதிய பணியாளர்களை சேர்த்த பின்னரும் இந்த சிறிய நிறுவனங்களின் மொத்த பணியாளர் எண்ணிக்கை அதிக பட்சமாக ஒன்பது மட்டுமே இருக்கலாம்.
  • 6. 3.7.2008 க்கு முன்பாக ஹஜ் அல்லது உம்ராவில் வந்து சட்ட ரீதியற்ற முறையில் வீட்டுப் பணியாளராக அல்லது தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் , தங்கள் நிலையை சரி செய்து கொள்ள அனுமதிக்கபடுவர். இவர்கள் முதலில் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று பதிவு செய்த பின் லேபர் ஆபீஸ் செல்ல வேண்டும்.
இந்த முறையில் புதிய பணியாளர்களை சேர்த்து கொள்ளும் சவுதி குடும்பத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை நான்கிற்கு மேல் இருக்கக்கூடாது.
புதிய பணியாளர்களை சேர்ப்பதன் மூலம் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளார்கள் உள்ள பச்சை நிற
நிறுவனங்கள் பச்சை நிற நிலையில் இருந்து கீழே வரக் கூடாது.

ஒன்பது பணியாளர்கள் அல்லது அதற்கு குறைவாகவும் குறைந்தது ஒரு சவுதி பிரஜை உள்ள சிறிய பச்சை நிற நிறுவனங்கள், நான்கு பணியாளர்களுக்கு மேல் சேர்த்துக்கொள்ள அனுமதி இல்லை. புதிய பணியாளர்களை சேர்த்த பின்னரும் இந்த சிறிய நிறுவனங்களின் மொத்த பணியாளர் எண்ணிக்கை அதிக பட்சமாக ஒன்பது மட்டுமே இருக்கலாம்.
  • 7. சவுதி பிரஜைகளுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்ட தொழில்களை கருத்தில் கொண்டு, தொழிலாளர் அமைச்சகத்தின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் வெளி நாட்டு பணியாளர்கள் தங்கள் தொழில் நிலையை சரி செய்து கொள்ள அனுமதிக்கபடுவர். சவுதி பிரஜைகளுக்கு ஒதுக்கப்பட்ட தனியான தொழில்கள்:
தலைமை நிர்வாக அதிகாரி
மேனேஜர்
தொடர்பு அதிகாரி
தனி விவகார நிபுணர்
பல வகை அலுவலக உதவியாளர்கள் (CLERKS)
காசாளர்
பாதுகாப்பு உழியர்
நகல் எடுப்பவர்
சுங்க விவகார ஊழியர்
மகளிர் ஆடைகள் மற்றும் பொருட்கள் கடைகளில் பணி புரியும்
பெண் ஊழியர்கள்.
  • 8. சலுகை காலத்தில் கட்டணம் இன்றி எல்லா வெளிநாட்டு பணியாளர்களும் தங்கள் தொழிலை மாற்றிகொள்ளலாம்.
  • 9. சலுகை காலத்தை பயன்படுத்தி தங்கள் நிலையை சரி செய்ய எல்லா வெளி நாட்டு பிரஜைகளுக்கும் வாய்ப்பு அளிக்கபடுகிறது.
  • 10. சலுகை காலத்தில், புதிய பணியாளர்களை சேர்க்கும் நோக்கத்தில், தனியார் நிறுவனங்கள் சவுதி தொழிலாளர் அமைச்சகத்தின் பணியாளர் சதவிகித விதிகளை பின் பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
நன்றி: இந்திய தூதரகம் – ரியாத்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.