கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் ஆதரவோடு இன்று [ 18-05-2013 ]மாலை 5 மணியளவில் நமதூர் கடற்கரைத் தெரு ஜும்மாப் பள்ளி எதிரே அமைந்துள்ள பிராதான மைதானத்தில் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.
அதிரையில் உள்ள பிற ஜமாத்தினர்க்கு நல்லதொரு முன்னுதாரணமாக திகழ்கின்ற வகையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் +2 அரசுப் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற கடற்கரைத்தெருவைச் சார்ந்த கீழ்கண்ட மாணக்கர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அவர்களின் விபரங்கள் :
1. வசீமா த/பெ. நவாஸ்கான் [ 1149/1200 ]
2. அப்துல் ரஹ்மான் த/பெ. தீன் முகம்மது [ 973/1200 ]
3. முகம்மது ஹல்மி த/பெ. ஜெகபர் சாதிக் [ 967/1200 ]
4. முகம்மது ரித்வான் த/பெ. முக்தார் அலி [ 950/1200 ]
ஆகிய நால்வரோடு மற்றும் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் +2 அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கடற்கரைத்தெரு மாணவிகள் இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அம்மாப்பட்டினம் அன்னை ஹதீஜா மகளீர் கல்லூரியின் தாளாளர் CMN. சலீம் அவர்களும், பிரபல எழுத்தாளரும் சமூக ஆர்வலருமாகிய ஆளூர் ஷாநவாஸ் அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
முன்னதாக சிறப்பு அழைப்பாளர்களாக மாநாட்டில் கலந்து கொண்ட காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர் அஹமது கபீர் மற்றும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி ஆகியோர் கல்வியின் அவசியம் குறித்து தங்களின் சிற்றுரையில் பேசினார்கள்.
நமதூர் மாணவ, மாணவியர்களின் கல்வி நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பெண்களுக்கு என தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சிகுரிய அனைத்து ஏற்பாடுகளையும் கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் ஆதரவோடு தாயக கடற்கரைத்தெரு ஜமாத்தார்கள் சிறப்பாக செய்துருந்தனர்.
நன்றி : அதிரைநியூஸ்
மாஷா அல்லாஹ்
ReplyDeleteபதிப்புக்கு நன்றி
அருமையான ஏற்பாடு, கல்வியின் அவசியத்தையும் விழிப்புணர்வு கருத்துகளையும் அதிகமாக பேசி உள்ளார்கள் சகோ CMN சலீம் மற்றும் சகோ ஷாநவாஸ்
சகோ ஷாநவாஸ் அவர்களின் உரையில் நம்சமுதாய மக்கள் சமூக தளத்தில் பெறவேண்டிய படிப்பினைகளையும் சகோ சலீம் கல்வியினால் சமுதாயம் பெற்ற வேண்டிய படிப்பினைகளை பட்டியலிட்டு பேசியது அருமையான
விஷயம்.சகோ CMN சலீம் 6வது முறையாக பேசிவிட்டு செல்கிறார்கள்.CMN சலீம் அவர்களின் கருத்தை நாம் ஒரு முறையாவது பின்பற்றி இருக்கிறோமா? யோசிக்க வேண்டும்.இது போன்ற விழிப்புணர்வு நிகழ்சிகளில் பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் நம்முடைய செயல்பாடு அமைய வேண்டும்.வெறும் வழக்கமான நிகழ்வாக இருக்கக்கூடாது
------------------
இம்ரான்.M.யூஸுப்
மக்கள் தொடர்பு செயலாளர்
அமீரக சமூகநீதி அறக்கட்டளை
Thanks to Beach Street brothers for this good effort
ReplyDeleteadiraiameen