ஆசை மனிதனின் இயல்பு ஓர் நிறுவனத்தில் தொழில்புரியும் தொழிலாளி தம் மேலாளர் நிலை கண்டு அதுபோல் ஆக ஆசை, மேலாளருக்கோ தன் முதலாளியின் நிலை கண்டு ஆசை, முதலாளிக்கு மற்ற உயர் நிறுவனத்தின் உரிமையாளரின் மேல் நாட்டம், இப்படித்தான் உலக நிலை.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து நம் தமிழ் பொன்மொழி இது குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வரலாம் வியாபாரத்திற்கு பொருந்தாது போதுமென்ற குணம் பொருளாதாரத்தை மேம்படுத்தாது தொழிலின் வளர்ச்சிக்கு தேடலும் போட்டியும் அவசியமே !
ஆசையுள்ள மனிதனின் தேடல், தம் நிலைக்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும். அழுக்கு தீர குளித்தவனும் இல்லை ஆசை தீர வாழ்க்கையை ஒட்டியவனும் இல்லை.
சிலருக்கு தம் தந்தை, பாட்டனாரின் தொழில் தொன்று தொட்டு தம்மீது வந்து சேரும் அப்படி கிடைத்த தொழிலை தன் தந்தையின் அனுபவத்தோடு இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு போட்டி போடவேண்டும்.
ஒருவர் தொழில் தொடங்கவேண்டுமானால் மாவட்ட வணிகவரி மையத்தில் மனு செய்யவேண்டும் [ GOVERMENT OF TAMILNADU COMMERCIAL TAXES DEPARTMENT ] 11 இலக்கம் கொண்ட Tin Number தருவார்கள் இது இந்தியா முழுவதும் தொழில் செய்ய பொருந்தக்கூடியதாக இருக்கும்.
மனு செய்யும் முறை பற்றி பார்ப்போம் :
1. நம் புகைப்படம்
2.ரேசன் கார்டு ஜெராக்ஸ்
3. PAN கார்டு ஜெராக்ஸ் [ Proprietor ]
4. சொத்து சம்மந்தப்பட்ட டாக்குமெண்டுஸ் ஜெராக்ஸ்
5. வாடகை ஒப்பந்த பத்திரம் ஜெராக்ஸ்
6. Form F Form A பூர்த்தி செய்யவேண்டும்
7. Rs. 500/- ரூபாய்க்கு DD எடுக்கவேண்டும்
8. ஏற்கனவே TIN NO உள்ளவர்களின் பரிந்துரை கடிதம் 2 வேண்டும்.
இவற்றை சமர்பித்தால் ஒரு வாரத்தில் நம் முகவரி தேடி நமக்கு டின் நம்பர் சர்டிபிகேட் வந்துவிடும் அதன் பிறகுதான் Bank A/C திறக்க முடியும் எல்லாம் முடிந்தவுடன் வியாபாரத்தை துவங்கலாம்.
சகோ. சேக்கனா நிஜாம் அவர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டேன் என்ற மன நிறைவோடு மற்றும் ஒரு விஷயம்...
வாசகர்களாகிய உங்களுக்கு ஒரு போட்டி வைக்கலாம் என்று இருக்கிறேன் !
இரண்டு திருடர்கள் ஒருவன் 25 முறை திருடி இருக்கின்றான் ஒரு முறையாவது போலிஸிடமோ அல்லது பொது மக்களிடமோ மாட்டியது கிடையாது ! 2 ஆம் திருடன் 100 முறை திருடியுள்ளான் 50 முறை எதிலும் மாட்டவில்லை 25 முறை பொது மக்களிடமும் 25 முறை போலீசிடமும் அகப்பட்டு தர்ம அடிகளும் கேஸ்களும் போடப்பட்டுள்ளது.
இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி தங்களுக்கு திருடலாம் என ஆசைவந்து !? நீங்கள் அந்த திருடர்களிடம் அனுபவங்களையும், ஆலோசனைகளையும் கேட்கலாம் என்று விரும்புகின்றிர்கள் இரு திருடர்களின் வீடும் அடுத்தடுத்தே இருக்கின்றது யாராவது ஒரு திருடன் வீட்டுக்கு சென்று ஆலோசனை பெறலாம் என்றால் மற்றொரு திருடன் வீட்டுக்குள்ளே அனுமதிக்கமாட்டான்
ஆகையால் யாராவது ஒரு திருடனைத்தான் தேர்ந்தேடுக்க முடியும் தாங்கள் ஏதாவது ஒரு திருடனை தேர்ந்தெடுத்து ஆலோசனை பெறுங்கள் ஏன் அவரை தேர்ந்தேடுத்தீர்கள் என்பதை விளக்கமாக கருத்துப்பகுதியில் விளக்குங்கள் தங்களின் மேலான விளக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு எனது 6 வது தொடரில் தங்களின் கருத்தும் இடம்பெறும்.
ருசிகர தகவல் காத்திருக்கின்றது விளக்கமாக கருத்திடுங்கள்.
காத்திருங்கள் வியாழன் வரை...
மு.செ.மு.சபீர் அஹமது
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment