கடந்த [ 11-01-2013 ] வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் மேலத்தெரு தாஜூல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் பத்தாவதுக் கூட்டத்தில் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு ஓராண்டு சிறப்பாக நிறைவுற்றதை அடுத்து AAMF’ன் 2012 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையை பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களால் வாசிக்கப்பட்டது.
ஆண்டறிக்கையின் சிறப்பு அம்சங்கள் :
[ a ] 18 பக்கங்களைக் கொண்ட AAMF’ன் ஆண்டறிக்கையை வாசித்து முடிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் சிறப்பு விருந்தினர்களாக கூட்டத்தில் கலந்துகொண்ட பலரை அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
[ b ] AAMF’ன் சார்பாக இதுவரையில் நடத்தப்பட்ட மாதாந்திரக் கூட்டங்கள், சிறப்புக் கூட்டங்கள், அவசரக் கூட்டங்கள் போன்றவற்றில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதில் செயல்படுத்தப்பட்டவை மற்றும் செயல்படுத்தப்படக்கூடியவை ஆகியன தொடர்பாக உள்ள தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளது.
[ c ] மேலும் AAMF’ன் சார்பாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள், நிதி உதவிகள் ஆகியன தொடர்பான தகவல்களும் இதில் இடம்பெற்றள்ளது.
No comments:
Post a Comment