பேருந்து நிலையம்
பயணிகளின் ஆர்வம் செல்லும்
ஊருக்கு பேருந்து வருகிறதா
என்ற ஆர்வம்
பயணி என்றால் பைத்தியகாரன் என்பர்
உண்மையிலேயே பைத்தியம் போல்
ஒருவர் அங்கும் இங்குமாக
அலைந்தவராய் இருந்தார்
கண்கள் எதையோ தேடியது
அங்கிருந்தோர் சிலர் என்னாயிற்று
என கேட்க பல ஆயிரம் பணத்தோடு
சில தங்க நகைகளும் தொலைந்ததை
கூறி அழுதார் பார்போர் மனம்
பதை பதிக்க கவிஞானி மட்டும்
ஏளனமாய் சிரித்து விட்டார்
என் சிரித்தீர் ? என சிலர் கேட்க
பதில் பகர்ந்தார் கவிஞானி.
இவன் தொலைத்தது பணம்
மட்டுமல்ல வாழ்க்கையையும் தான்
பெரும் பணம் படைத்த செல்வன் இவன்
சூது எனும் மாய நோயில் இவன் மனமும்
கலந்ததையா தினம் இவன்
இல்லாளின் நகையை எடுத்து வந்து
சூதில் தொலைப்பதுவே இவன் வேலை
வீதியில் தொலைத்த பணம்
இவன் கையில் கிடைத்து விட்டால்
சூதில் போய் தொலைத்திருப்பான் ஐயா
தொலைக்க இவனிடம் ஏதுமில்லை
எனவே தான் அழுகின்றான்..!
சூதும் மாதும் வேதனை செய்யும்
என்ற மூதாட்டி அவ்வை சொல்
அறியாதார் யாருமுண்டோ...!
என் சொல்லி சிரித்தார்
கவிஞானி
[ சிரிப்பது தொடரும் ]
No comments:
Post a Comment