தண்ணீர் ஆம் அது ஒரு இயற்கையின் வரம் என்றே சொல்ல வேண்டும் தண்ணீரின் பயன்பாடுகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை அந்த அளவுக்கு உலக மக்கள் அனைவரும் நன்கு அறிந்ததே.
பண்டைய காலங்களில் வாழ்ந்து வந்தவர்கள் ஆங்காங்கே குளங்களையும் ஏறிகளையும் ஆறுகளையும் கிணறுகளையும் வெட்டி மழைநீரை சேமித்து தடையில்லா தண்ணீரைப் பெற்று வந்ததோடு குளங்களையும் ஏறிகளையும் ஆறுகளையும் கிணறுகளையும் எந்த விதத்திலும் மாசுபடாதவாறு காத்துவந்தார்கள்
ஆனால் இன்றைய காலத்தில் தண்ணீரை எப்படி சேமிப்பது தண்ணீரை எப்படி மிச்சப்படுத்துவது தண்ணீரை தடையில்லாமல் பெற என்ன செய்வது இன்னும் பல கோணங்களில் சிந்தித்து ஆய்வுகளை நடத்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது இந்த உலகம் இருந்தாலும் தண்ணீரினால் ஏற்பட்ட தின்டாட்டங்களும் போராட்டங்களும் குறைந்தபாடில்லை தீர்வும் கிடைத்தபாடில்லை.
மூன்றாவது உலக யுத்தம் வந்தால் அதற்குக் காரணமாக இருக்கப் போவது தண்ணீர்தான் என்று பல வருடங்களாக அறிஞர்களும் விஞ்ஞானிகளும்; எச்சரித்து வருகிறார்கள்.
மனித வரலாற்றில் பல வகையான நாகரீக சமூகங்களும் பல வகையான உயிரினங்களும் பல வகையான தாவரங்களும் அடியோடு அழிந்து போனதற்குக் காரணம் தண்ணீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்டதால்தான்.
ஏற்கனவே தண்ணீருக்காக இந்தியாவில் பல மாநிலங்களுக்கிடையே குட்டி யுத்தங்கள் நடந்து வருகின்றன. இதற்கெல்லாம் தீர்வு நதிகள் இணைப்பு என்ற தவறான பிரச்சாரம் ஒரு பக்கம் நடக்கிறது. நதிகளை இணைப்பதால் பாதிக்கப்படும் நிலங்கள் மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையைவிட பெரியவை. எனவே ஆறு குளம் ஏரி கிணறு இவைகளை மாசுபடுத்தாமல் காப்பது மணற் கொள்ளையை நிறுத்துவது மழை நீர் சேகரிப்பு கடலில் வீணாகக் கலக்கும் நீரை மிச்சப்படுத்துவது இப்போது நீரைப் பயன்படுத்தும் முறைகளில் சிக்கனத்தை கொண்டு வருவது முதலியவைதான் அசல் தீர்வுகள்.
இன்று தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊராக சென்று ஒரு ஆய்வு நடத்தனால் ஏகப்பட்ட குளங்களும் ஏறிகளும் ஆறுகளும் கிணறுகளும் காணாமல் போய்விட்டது இருக்கின்ற ஒரு சில குளங்கள் ஏறிகள் ஆறுகள் கிணறுகள் இவைகளை சுத்தமாக தூர்வாரி அதன் எல்லாப் பக்கங்களிலும் வலுவான உயரமான மண் அடைப்டபுகளை இட்டால்கூட ஓரளவுக்கு தண்ணீர் பற்றாக் குறையிலிருந்து தமிழகம் மீளமுடியும் என்பதில் ஐயமில்லை.
தமிழகத்தில் வசதியுள்ள இடங்களில் தடுப்பணைகளைகட்டி ஆங்காங்கே மழைநீரை சேமித்தால் நமக்கு முல்லை பெரியாரும் தேவையில்லை காவிரியும் தேவையில்லை போராட்டங்களும் தேவையில்லை எந்தப் பிரச்சனையும் தேவையில்லை.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் தடையில்லா மின்சாரமும் வற்றாத நீரும் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்றால் அங்கு மழைநீரை சரியான முறையில் சேமித்து வருகின்றனர். இதையே நாமும் தமிழகத்திலும் பின்பற்றி வந்தால் நமக்கு திண்டாட்டமும் போராட்டமும் இல்லாமல் அமைதியானமுறையில் தண்ணீர் கிடைக்கும் என்பதில் கொஞ்சங்கூட சந்தேகமே இல்லை.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று தஞ்சை மாவட்டம் அன்று அழைக்கப்பட்டு வந்தது அதே மாவட்டம் இன்று தமிழகத்தின் வீடுமனைகளுக்கு பிரசித்திபெற்ற மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
தடையில்லா மழையைப் பெறுவதற்கு மரங்களை பாதுகாப்போம் புதிய மரக்கன்றுகளை நடுவோம் மழைநீரை சேமிப்பதற்கு குளம் ஆறு ஏறி கிணறு இவைகளை பராமரிப்போம்.
சிந்திப்போம்...
செயல்படுவோம்...
சந்தோஷமாக இருப்போம்...
எதிர் காலத்தை வளமுள்ளதாக்குவோம்.
செயல்படுவோம்...
சந்தோஷமாக இருப்போம்...
எதிர் காலத்தை வளமுள்ளதாக்குவோம்.
வாழ்க வளமுடன்
அன்புடன்,
அன்புடன்,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

நன்றி : சமூக விழிப்புணர்வு பக்கங்கள்
காலத்திற்கேற்ற் மிக அருமையான விழிப்புணர்வு கட்டுரை மனித உயிர் வாழ தண்ணீர் மிக முக்கியம் என்றால் அது மிகையாகாது ஒன்று ஜமால் காக்கா நீங்கள் எழுதியது போன்று தமிழகத்தில் வசதியுள்ள இடங்களில் தடுப்பணைகளைகட்டி ஆங்காங்கே மழைநீரை சேமித்தால் நமக்கு முல்லை பெரியாரும் தேவையில்லை காவிரியும் தேவையில்லை போராட்டங்களும் தேவையில்லை. சரியான வார்த்தை நம் இளைய தலைமுறைகளலாவது, இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மரங்களை வளப்போம் மழைநீரை சேமிப்போம் நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம். வாழத்துக்கள்
ReplyDelete