பெண்ணே...!
நீ ஏன் பிறந்தாய்
பள்ளி செல்லும் உன்னை
பள்ளியறை அழைக்கும்
பாதகர் நிறைந்த பூமியில்
ஏன் பிறந்தாய் பெண்ணே...!
உன் முக அழகை
பார்த்து பார்த்து
ஒரு தலை காதலால்
ஈர்த்து ஈர்த்து
தன்வய படுத்த எண்ணி
தோற்ற கயவன்
உன் முகத்தை
தீ நீரால் சிதைக்கும்
கயவன் நிறைந்த
பூமியில் ஏன் பிறந்தாய் பெண்ணே..!
மலராய் மலர்ந்து
மனம் கமழும் உன்னை
மணமுடிக்க பணம் கேட்கும்
கயவர் பூமியில் ஏன் பிறந்தாய் பெண்ணே
மனித இனம் பெருகிடவே
மகத்துவத்தை உன்னிடமே
வல்ல இறை தந்து
தரணியிலே தாய் என்று
போற்ற படவேண்டிய நீ
தள்ளாத வயதிலுமே
தண்டிக்க படுகின்றாய்
தரணியிலே வந்து நீயும்
வேதனைதான் பட்டிடனுமா...?
ஏன் பிறந்தாய் பெண்ணே
ஏன் பிறந்தாய்
பேருந்தில் சென்றாலும்
போக பொருளாய்
பார்க்கும் காலத்தில்
ஏன் பிறந்தாய் பெண்ணே
ஏன் பிறந்தாய்...
[ பதில் அடுத்த ஆக்கத்தில்... ]
ஏன் பிறந்தாய் ? தொடரும்...
சகோதரர் சித்திக் அவர்களின் கவிதை காலத்திகேற்ற அருமையான கவிதை உங்களின் இந்த கவிதையியுள்ள ஒவ்வொரு வரியும் அருமை அதில் இந்த வரி ரொம்ப அருமை தரணியிலே தாய் என்று போற்ற படவேண்டிய நீ தள்ளாத வயதிலுமே தண்டிக்க படுகின்றாய் இது சிந்திக்க வேண்டிய வரிகள் வாழ்த்துக்கள்
ReplyDelete