Latest News

அது என்ன காதலர் தினம் !?



காதலர்கள் தினம் என்ற பெயரில் போலி முகம் கொண்ட கள்ளக்காதலர்கள் காம போதையை அனுஷ்டிக்கவும் தன் இச்சைகளை தீர்த்துக்கொள்ளவும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு காதலர்கள் தினமென்று பெயரிட்டு கொண்டாடுகிறார்கள்.

மனதும் மனதும் உள்ளத்தால் மட்டும் நேசிக்கப்படுவதுவே உண்மைக்காதலாகும். உண்மைக்காதல் ஒரு போதும் விழாவாக வீதிக்கு வராது. காதல் என்ற பெயரில் என்ன நடக்கிறது என்று இன்றைய காலத்தில் நாம் கண்கூட காண்கின்றோம்.

உண்மைக்காதலென்று காதலர்கள் தினம் கொண்டாடுபவர்கள் காதலியோ, காதலனோ தன் கையைதொடவோ, முத்தமிடவோ சம்மதிக்க வில்லையெனில் அக்காதலை ஏற்றுக்கொள்வார்களா..?

சமீபத்தில் ஒரு சகோதரிக்கு நடந்த காதல் என்ற போலிப்பெயரில் ஒரு காமுகனின் மனசாட்சியில்லா கொடுஞ்செயலை யாவரும்   மறந்து   விட  முடியாது.  காதலில்  உடன்பாடாத  ஒரு கள்ளம் கபட மற்ற படிப்பே வாழ்வாய் நினைத்து பட்டம் பயின்று வந்த பச்சிளம் பெண்ணை  ஒரு கயவனின் காமப்பார்வை  காதலெனும்   போலி வார்த்தைக்கு கட்டுப்படவில்லை என்று . திராவகத்தை முகத்தில்  எறிந்து அந்த சகோதரியை  அகால மரண மேடைக்கு அனுப்பி வைத்த  மனிதாபமற்ற , மனசாட்சியில்லாத  செயல் அரங்கேறியதே... அதை என்னென்று சொல்வது...?  உண்மைக் காதலேயானால் ஒரு போதும் இக்கொடுஞ்செயலை செய்யாது.

அப்படியானால் இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது..! காதல் ஒரு வகை காம உணர்வே.! நான் இன்னாருடைய காதலி என்றோ இன்னாருடைய காதலன் என்றோ வெளி உலகிற்கு சொல்லிக்கொள்வதில் எந்தச்சிறப்பும் இல்லை.தன் பிள்ளை இன்னாரை காதலிக்கிறாள் என்றோ, இன்னாரை காதலிக்கிறான் என்றோ எந்தப்பெற்றோர்களும் பெருமைப்படப்போவதில்லை. மாறாக தன்னையும் கலங்கப்படுத்திக்கொண்டு தன் பெற்றோர்கள் உற்றார் உறவினர்கள் அனைவரையும் கலங்கப்படுத்தி நிம்மதி இழக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உண்மை காதல் என்பது எதையும் சுயநலத்துடன் பாராமல் இரு உள்ளங்களின் மனதில் ஏற்ப்படும் ஏதாவது ஒரு அன்பின் வெளிப்பாட்டை நேசித்து வாழ்வில் இணைய வேண்டும் என்ற ஒரு சிந்தனையை மட்டுமே கொண்டதாக இருக்கும். அப்படி ஏற்படும் காதலில் எந்த கலங்க உணர்வும் இருக்காது. அப்படி யார் காதலிப்பது..?!?

நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்க்க தெரியாத இரண்டும் கேட்டான் வயதில் ஏற்படும் காதல் மிக ஆபத்தை விளைவிக்ககூடியதாக இருக்கும். இந்த வயதில் நிதானத்தை கடைபிடித்தல் வேண்டும். இல்லையேல் வாழ்க்கை சின்னா பின்னமாகிவிடும். பெற்றோர்களின் அறிவுறுத்தல், மிக அவசியம்.

காலம் மாறலாம் காதல் மாறுமா என்று சொல்வது... போல காதல் என்பது காலம் காலமாக மனதோடு இணைந்து எச்சூழலிலும் கைவிடாமல் வாழ்வில் தம்பதியர்களாக இணைவதாகும். இது உண்மையான நேசத்துடன் கரம் பிடிப்பவர்களுக்கே பொருந்தும்.!

நம் நாட்டில் மகளிர் தினம், அன்னையர் தினம், உழைப்பாளிகள் தினம்,தொழிலாளர்கள் தினம்,என்று இப்படி எத்தனையோ தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அவைகள் அனைத்தும் சமுதாயத்திற்கு பயனுள்ள நோக்குடனும் மக்களிடயே விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் நோக்குடனும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த காதலர்கள் தினம் எந்த நோக்குடன் கொண்டாடுகிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கள்ளக்காதலர்களுக்கு இந்த காதலர்கள் தினம் ஒரு காரணியாக பயன்படுகிறது. உண்மைக்காதலர்கள் ஒரு போதும் இக்கொண்டாட்டத்திற்கு உடன்பட மாட்டார்கள்.

இக்காதலர்கள் தினம் என்பது மேற்க்கத்திய கலாச்சாரமாகும். நம் நாட்டிற்கு எச்சூழலிலும் பொருத்தமில்லாத ஒன்றே..! இது தொடர்ந்தால் நம் நாட்டு கலாச்சாரம் பண்பாடு கலங்கப்படுவதுடன் பல அபலைப்பெண்களின் வாழ்வும் கலங்கப்பட்டு விடும். ஆகவே பாரம்பரிய மிக்க நம்நாட்டு கலாச்சார பண்பாடுகளை சீர்குலைக்கும் இக்காதலர்கள் தினம் தேவைதானா...??? என்பதை சற்று சிந்திப்போமாக...!!!

அதிரை மெய்சா 

e-mail : myshaadirai@rediffmail.com
நன்றி : சமூக விழிப்புணர்வு பக்கங்கள் 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.