காஸா: வியாழக்கிழமை (11/10/2012) அதிகாலையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை காஸாவின் வடமேற்குப் பிரதேசத்தில் போர்விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது.
அண்மைக்காலமாக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் காஸா மீது தொடர்ந்து மேற்கொண்டுவரும் போர்விமானத் தாக்குதல்களினால் பலஸ்தீன் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காஸாவின் பல பள்ளிக்கூடங்கள் நெருக்கடியான நிலைமையைக் கருத்திற்கொண்டு மாணவர்களுக்குத் தற்காலிக விடுமுறை வழங்கியுள்ளன.
இந்நிலையில், வடமேற்கு காஸா மீதான இஸ்ரேலிய போர்விமான ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரை பதிவாகவில்லை என்றும், இத்தாக்குதலினால் பாரிய பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதென்றும் உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
சமீப காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் காஸா மீதான போர் விமானத் தாக்குதலில் உயிரிழப்புக்களோடு, சிறுவர்கள் உள்ளிட்ட பலஸ்தீன் பொதுமக்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
சர்வதேச சட்டங்களுக்கு எந்தவகையிலும் கட்டுப்படாமல், நிராயுதபாணிகளான பலஸ்தீன் பொதுமக்கள் மீது தொடர் தாக்குதல் நிகழ்த்திவரும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களை உடனடியாகத் த்டுத்து நிறுத்த சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என பலஸ்தீன் மக்கள் அமைப்புக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment