டெல்லி: தகவல் அறியும் உரிமைச்சட்டம் தனி நபர்களின் சுதந்திரத்தைப் பாதிப்பதாக இருந்தால் அதில் சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மத்திய தகவல் ஆணைய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன சிங் இவ்வாறு கூறினார்.
தனி நபர் சுதந்திரத்திற்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கும் இடையே நீதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தினை பயன்படுத்தி, தனிநபர்கள் குறித்து தேவையில்லாத தகவல்கள் திரட்டுவதை தடுக்க சில கட்டுபாடுகளை கொண்டுவர வேண்டும்.
மேலும் இந்த சட்டத்தினால் தனிநபர்களின் அடிப்படை உரிமைகள் , சுதந்திரம் எந்த வகையிலும் பாதிக்கப்பட கூடாது. ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இது போன்ற அடிப்படை உரிமைகள் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சில தேவையில்லாத பிரச்னை ஏற்படுகிறது. இதனை தடுக்க சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment