அல்லாஹ்வின்திருப்பெயரால்...
சத்தியம் செய்ய தயாரா? சம்சுல் இஸ்லாம் சங்கத்தினருக்கு மௌலவி ஹைதர்அலி ஆலிம் அழைப்பு:
மௌலவி ஹைதர் அலி ஆலிம் அவர்கள், தன் மீது சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் பொய்யான குற்ற்ச்சாட்டுக்களை கூறி வருவதில் மிகவும் மன வேதனை அடைந்து, நேற்று (04.09.12) இஷாவுக்குப்பின் சித்தீக் பள்ளியில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட ஜமாத்தார்கள் முன்னிலையில் கீழ்கண்டவாறு அறிவித்தார்கள்:
அதிரையில் உள்ள ஏதாவது ஒரு ஜும்'ஆ பள்ளியில் வெள்ளிக்கிழமை அஸருக்குப்பின் குத்பா மேடையில் ஒளுவுடன் ஏறி நின்று, " நான் என் வீடு தேடி வந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்தினரை அவமதிக்கவுமில்லை, அந்த எண்ணம் இலட்சத்தில் ஒரு பாகம் கூட என் உள்ளத்திலும் இல்லை, மேலும் நான் எந்த இயக்கத்தினருடன் சேர்ந்து கொண்டு ஊர்ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கவுமில்லை, ஊரை பிரிக்கவேண்டுமென்ற எண்ணம் சிறிதும் என் மனதில் இல்லை. நான் சொல்வதுபொய்யானால் எல்லாம் வல்ல அல்லாஹ் என்னை அழித்து விடுவானாக என்று சத்தியம் செய்யதயாராக இருக்கிறேன்.
அதுபோல், என் மீது குற்றம் சுமத்தும் என் வீடு தேடிவந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்தினரும் முன் வந்து "ஹைதர் அலி ஆலிம் எங்களை அவமதித்தார், இயக்க இளைஞர்களுடன் சேர்ந்து கொண்டு ஊரை பிரிக்க முயற்சிக்கிறார், நாங்கள் உண்மையை தான் சொல்கிறோம், மாறாக நாங்கள் சொல்வது பொய்யென்றால் எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களை அழித்துவிடுவானாக "என்று என்னை போல் குத்பா மேடையில் ஏறி சத்தியம் செய்ய வேண்டும்.
நன்றி
அதிரை இஸ்லாமிக் மிஷன்
No comments:
Post a Comment