அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு....
அன்புக்குறிய அதிரை முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு
கடந்த சில தினங்களாக நடந்து வரும் பிரச்சனைகளின் அடிப்படைகளையும் அதன் காரணங்களையும் சிந்திக்கும்போது அல்லாஹ் ஸுபுஹானஹு வதாஆலா ஸூரா அன்கபூத் அத்தியாயத்தில் பின்வரும் ஆயத்துகளில் நம்மை எச்சரிக்கும் விஷயங்களையும் ஆராய்வது நம்மீது அவசியமாக இருக்கிறது.
அல்லாஹ் கூறுகிறான்....
أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ
29:2. “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?
وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ
29:3. நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.
أَمْ حَسِبَ الَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ أَن يَسْبِقُونَا ۚ سَاءَ مَا يَحْكُمُونَ
29:4. அல்லது: தீமை செய்கிறார்களே அவர்கள் நம்மைவிட்டும் தாங்கள் தப்பிக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் (அவ்வாறு)தீர்மானித்துக் கொண்டது மிகவும் கெட்டது.
مَن كَانَ يَرْجُو لِقَاءَ اللَّهِ فَإِنَّ أَجَلَ اللَّهِ لَآتٍ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
29:5. எவர் அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று நம்புகிறார்களோ அவர்கள் (அதற்காக நல்ல அமல்களைச் செய்து கொள்ளட்டும்); ஏனெனில் அல்லாஹ்(அதற்காகக் குறித்துள்ள) தவணை நிச்சயமாக வருவதாக இருக்கிறது; அவன் (யாவற்றையும்)செவியேற்பவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
وَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَلَيَعْلَمَنَّ الْمُنَافِقِينَ
29:11. அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான்.
இன்று நடக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போராட்டமாகும். ஷைத்தானிய கொடியை தூக்குவோருக்கும் அல்லாஹ்வின் கொடியைத் தூக்குவோருக்கும் நடக்கும் பிரச்சனையாகும்.வணக்கம் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம்,அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் எந்த இடைத்தரகர்களும் இல்லை என்று கூருவோருக்கும் , இல்லை வணக்கம் என்பது அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் வணங்குவது அடக்கம் என்றும் அதற்காக எங்களை இடத்தரகர்களாக ஆக்கி எங்களுக்கு கூலி தரவேண்டும் என்று கொடி தூக்கி இருக்கும் கோஷ்டிக்கும் நடக்கும் போராட்டமாகும்.
துரதிஷ்டவசமாக சில நல்ல முஸ்லிம் சகோதரர்கள், சங்க பொருப்பாளர்கள், ஊர்மக்கள் நன்னம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்த பதவியில் இருக்கும் பொருப்பாளர்கள் ஷைத்தானின் வலையில் சிக்கி நயவஞ்சகர்களின் பேச்சை நம்பி அவர்களுக்கு ஒத்தாசையாக இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
இத்தகைய வலையில் சிக்கிக்கொண்ட நல்ல சகோதரர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் "அன்புக்குறிய சகோதரர்களே மேற்கண்ட அல்லாஹ்வின் ஆயத்துக்களை நன்கு படித்து சிந்தித்துப்பாருங்கள்.நீங்கள் எந்த நிலையில் யாருடன் இருக்கிரீர்கள் என்பதை உங்களுடைய நெஞ்சில் கை வைத்து உங்களிடமே கேளுங்கள்."
உங்களை அல்லாஹ் சோதிக்கிறான் என்பதை நீங்கள் அறியவில்லையா? நீங்கள் உண்மையாளர்களுடன் இருக்கிறீர்களா, அல்லது அல்லாஹ்வுக்கு எதிரான போர்செய்யத் துடிக்கும் நயவஞ்சகர்களுடன் இருக்கிறீர்களா என்பதை அல்லாஹ் இந்த சோதனையின் மூலம் வெளிப்படுத்தப் போகிறான் என்பதை நீங்கள் என்னிப்பார்க்கவில்லையா?
உலமாக்கள் என்ற போர்வையில் தங்கள் குடும்ப கவுரவம் காப்பதற்காக குர் ஆனை தங்களுக்கு சாதகமாக வலைக்க முனையும் சில போலிமூசாக்களுக்கு நாம் கூறுவது " நீங்கள் மக்களை வழிகெடுக்கும் சதிகளை இத்துடன் நிறுத்தாவிட்டால் அல்லாஹ்வின் தண்டனைக்காக காத்திருங்கள்"
அனைத்து முஸ்லிம் சகோதரர்கள், சகோதரிகள் ரஸூலுல்லாஹ்(ஸல்)அவர்கள் காலத்தில் நடந்த இந்த விஷயத்தை சிந்திக்க வேண்டுகிறோம்.
மதீனாவிலிருந்து வெளியூருக்கு ரஸூலுல்லாஹ்வுடன்(ஸல்) அன்ஸாரி ஸஹாபாக்களும் முஹாஜிர் ஸஹாபாக்களும் சென்றிருக்கும்போது சிறிய பிரச்சனையின் காரணமாக ஒரு அன்ஸாரி ஸஹாபி மற்ற அன்ஸாரி ஸஹாபாக்களை தனக்கு ஆதரவாகவும் முஹாஜிர் ஸஹாபி மற்ற முஹாஜிர் ஸஹாபாக்களை தனக்கு ஆதரவாகவும் அழைக்க பெரும் பிரச்சனை உருவாக இருந்த நிலையில் ரஸூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் அறிந்தவுடன் விரைந்து அங்கு சென்று அவர்களிடம் கேட்டார்கள் أبدعوى الجاهلية وأنا بين ظهرانيكم இஸ்லாத்திற்கு முந்தைய இருண்ட அறியாமைக்காலத்தின் செயலான இன,குடும்ப, கோத்திர வாதத்தையா செயல்படுத்த முனைகிறீர்கள் என்று வண்மையாக கண்டித்தார்கள்.
இன்று இந்த இரட்டை வேடக்காரர்கள் கூறுவது போல் வெளியூர் மனிதர் நம் ஊரில் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதை ஒரு விவாதத்திற்காக ஏற்றுக்கொண்டால், இஸ்லாம் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து இங்கு வந்திருக்க வாய்ப்பில்லை. இன்று அந்த ஸஹாபப்பெருமக்கள் வந்தால் இந்த நயவஞ்சகர்கள் தாயிப் நகரத்து மக்கள் ரஸூலுல்லாஹ்(ஸல்) மீது கல்லெறிந்தது போன்று எறிவார்களா? அல்லது பனூ ஹனீபா என்ற கோத்திரத்தைச்சார்ந்த முஸைலமா என்ற பொய்யன் பனூ ஹனீபா கோத்திர, இன வாதத்தை தூன்டி ரஸூலுல்லாஹ் மீதும் ஸஹாபாக்கள் மீதும் போர் தொடுத்து பல்லாயிரக்கணக்கான ஸஹாபாக்களை கொன்றது போன்று கொல்வார்களா?
நம் ஊர் மக்கள் எத்தனை நாடுகளில் பரவி வேலை செய்கிறார்கள்? ஏன் இந்த இரட்டை வேடக்காரர்களின் குடும்பத்தில் எத்தனை பேர் எத்தனை பேர் சிறிலங்கா மற்றும் பல்வேறு நாடுகளில் இமாம்களாக இருந்துக்கொண்டு அடிப்படை வாழ்வாதாரத்தை பூர்த்திசெய்த வண்ணம் வாழ்கின்றனரா இல்லையா? சிந்திக்க வேண்டாமா? பாரம்பரியம் பெருமை பேசும் இவர்களிடம் கைகூலி பெற்றுகொண்டு சத்தியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய சொல்கின்றனரா?
ஊர் சங்க நிர்வாகிகள், மற்றும் அதிகார பதவியில் இருப்பவர்களுக்கு
உங்களுக்கு அல்லாஹ் பதவியைத் தந்திருக்கிறான் என்பதற்காக நீங்கள் அதனை துஷ்பிரயோகம் செய்ய முனையாதீர்கள்.உங்களை விடவும் மிகப்பெரும் பதவியை பிர அவ்ன், நம்ரூதுக்கு அல்லாஹ் கொடுத்தான். அவர்கள் அதனை துஷ்பிரயோகம் செய்ததின் காரணமாக நம்ரூத் செருப்பால் அடிக்கப்பட்டு கொல்லப்பட்டான் என்பதை நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம். நம் கண்முன்னே லிபியாவின் கடாபி உங்களை விடவும் இலட்சக்கணக்கில் உயர்ந்த பதவியை, ஆப்ரிக்காவின் மிகப்பெறிய எண்ணை வளம்மிக்க நாட்டின் அதிகாரத்தை 40 வருடங்களாக கொடுக்கப்பட்டிருந்து அதனை துஷ்பிரயோகம் செய்து உண்மையான உலமாக்களை கொடுமைப்படுத்தியதின் காரணமாக அல்லாஹ் கடாபியின் முடிவை எப்படி ஆக்கினான் என்பதை நாம் கண்கூடாக கண்டோம். செருப்பால் அடித்துக் கொல்லப்பட்டு அவன் சடலத்தை இரைச்சிகள் பாதுகாக்கப்படும் அரையில் 7 நாட்களுக்கும் மேலாக வைக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டான். இத்தகைய நிலைக்கு உங்களை நீங்கலே அறியாமல் ஷைத்தான் கொண்டு போகும்முன் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
தப்லீக் ஜமாஅத் சகோதரர்களுக்கு
இந்த நயவஞ்சகர்கள் இப்பொழுது வெற்றியடைந்தால் நாளை வெளியூர்களிலிருந்து ஜமாஅத் வருவதை தடை செய்ய முனைவார்கள். இப்படித்தான் அவர்களை ஷைத்தான் அவர்களை மண் தின்னும் வரை கொண்டு செல்வான். இதன் காரணமாக நீங்களும் ஜமா அத்தில் வெளியூர் செல்வதை தடை செய்யலாம். வெளியூர்காரர்கள் இங்கு பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற அதே விவாதத்தை முன்வைப்பார்கள்
மேண்மைக்குறிய உண்மையான உலமாக்களுக்கு.
இந்த கபடதாரிகள் நாளை வெளியூர் இமாம்களை நாங்கள் பின்பற்றமாட்டோம். ஷாஃபி, ஹனஃபி எல்லாம் வெளி நாடு. எனவே உள்ளூர் "குட்டி" ஷத்தான்களைத் தான் நாங்கள் இமாம்களாக பின்பற்றுவோம் என்று கூறுவது வெகு தூரத்தில் இல்லை. ஏன் இன்னும் ஒருபடி மேலே சென்று இஸ்லாத்தை வெளி நாட்டிலிருந்து வந்த மதம் என்று பாசிச வாதிகள் கூறுவது போன்று கூறி, உள்ளூர் "குட்டி"ஷைத்தானிய மதங்களை பிரச்சாரம் செய்ய முனையலாம். கம்யூனிச நாடுகளில் இஸ்லாமிய பெயர் வைப்பதை தடை செய்தது போன்று தடை செய்து மாடசாமி, குப்புசாமி என்று தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டாலும் ஆச்சரியத்திற்கில்லை.
முனாபிக்குகளுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்யும் போலி(ஆலி)மூசாக்களுக்கு
நீங்கள் உடனே அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து மீளுங்கள். முனாஃபிக்குகளுடன் சேர்ந்து என்ன வழக்கு தொடுக்கலாம் எப்படி நல்ல உலமாக்களை பலிவாங்களாம் என்று சூழ்ச்சி செய்வதை உடனடியாக நிருத்துங்கள்.இல்லையெனில் எங்கள் இரட்சகன் கூறுவதையே உங்களுக்கு கூறுகிறோம்.
أَفَأَمِنَ الَّذِينَ مَكَرُوا السَّيِّئَاتِ أَن يَخْسِفَ اللَّهُ بِهِمُ الْأَرْضَ أَوْ يَأْتِيَهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ أَوْ يَأْخُذَهُمْ فِي تَقَلُّبِهِمْ فَمَا هُم بِمُعْجِزِينَ أَوْ يَأْخُذَهُمْ عَلَىٰ تَخَوُّفٍ…………
16:45.
தீமையான சூழ்ச்சிகளைச் செய்யும் அவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ, அல்லது அவர்கள் அறியாப்புறத்திலிருந்து அவர்களை வேதனை வந்து அடையாதென்றோ அவர்கள் அச்சந்தீர்ந்து இருக்கின்றார்களா?
16:46. அல்லது அவர்களின் போக்குவரத்தின்போதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்க மாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா? அல்லாஹ் அவ்வாறுசெய்தால் அவனை) அவர்கள் இயலாமலாக்க முடியாது.
16:47. அல்லது. அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் பொழுதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்கமாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா?) ...........
தங்கள் முன்னோர்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்த முனைந்து வழிகேட்டில் விழுந்த சகோதரர்களுக்கு
உங்கள் முன்னோர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளை நியாயப்படுத்த முனைந்து உங்களை அறியாமல் அல்லாஹ்வுக்கு எதிராக போர் தொடுக்க முனைந்து விட்டீர்கள். இன்று இந்த அதிரை மக்கள் முன்பு வேண்டுமானால் நீங்கள் உங்கள் முன்னோர்கள் பள்ளி நிலத்தை திருடவில்லை என்பதை நிரூபிக்க முனையலாம். ஆனால் நாளை மறுமை நாளில் அனைத்து படைப்புகளுக்கும். கோடான கோடி மக்களுக்கும் முன்னாள் அல்லாஹ்வின் முன்பு என்ன விவாதத்தை உங்களால் முன்வைக்க முடியும்? நீங்கள் இப்பொழுது செய்யும் தவறை நிருத்தி அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து தவறு செய்த உங்கள் முன்னோர்களுக்காக பாவமன்னிப்பு தேடுங்கள்,அவர்களுக்காக ஸதக்கா செய்யுங்கள். அவர்கள் ஆக்கிரமித்த சொத்துக்களை மீட்டு அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் ஒப்படையுங்கள். இதுதான் நீங்கள் உங்கள் முன்னோர்களுக்கு செய்யும் மிகப் பெரும் உபகாரமாகும். அவர்களை அல்லாஹ்வின் வேதனையிலிருந்து காப்பாற்றும் உதவியாகும்.
இப்படிக்கு
அதிரையை கடந்து வெளியூர், வெளிநாடு வாழ்
அதிரை முஸ்லிம்கள், மற்றும் உலமாக்கள் குழு
நன்றி
அதிரை இஸ்லாமிக் மிஷன்
No comments:
Post a Comment