Latest News

இராணுவ இரகசியம் கடத்தல் : வாலிபர் கைதின் நிஜப் பின்னணி என்ன?


எதிரி நாடான பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவ இரகசியங்களை கடத்த முயன்றதாகவும் அவரிடமிருந்து இராணுவ இரகசியங்கள் அடங்கிய சிடிக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதுபற்றி புலனாய்வு ஊடகம் ஒன்று எழுதியுள்ள கட்டுரையில் இதன் நிஜப் பின்னணி வேறு என்று கூறப்பட்டுள்ளது.
இணையம் மூலமாகவே கடத்தப்பட வாய்ப்புள்ள படங்களை சிடியில் போட்டு விமானம் ஏறிச் சென்று கொடுத்துவர வேண்டுமா என்கிற கேள்வியும் வேறு சில வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது.

தஞ்சை மாவட்டம் அதிராம் பட்டினம் ஆசாத் நகரைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்கிற 35 வயது வாலிபர் காய்கறி ஏற்றுமதி வியாபாரம் செய்துவந்ததாகவும், ஊட்டி, விசாகப்பட்டினம் சென்று அங்கு சில வாலிபர்களைச் சந்தித்து வந்ததாகவும், விசாகப்பட்டினம் கடற்படைத் தளம், அதன் அமைப்பு, போர்க் கப்பல்கள், ஊட்டி இராணுவ முகாம், அதன் பணிகள் ஆகியவற்றை சிடிக்களில் பதிந்து இலங்கையில் உள்ள ஐ எஸ் ஐ உளவாளி ஒருவரிடம் தந்து பணம் பெற்று வந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதுபற்றி கேள்வி எழுப்பியுள்ள புலனாய்வு ஊடகம் ஒன்று இதில் வேறு வித மர்மம் இருப்பதாகவும், இராணுவ இரகசியம் என்பது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மாநில முதலமைச்சரின் அதிகார வரம்புக்குள் உள்ள Q பிரிவு காவல்துறை இராணுவ இரகசியம் போன்ற விவகாரங்களை கையாள்வதில்லை என்றும், டிஃபன்ஸ் இண்டெலிஜன்ஸ் ஏஜன்சி எனப்படும் அமைப்பு தான் இராணுவ இரகசியக் கடத்தல்களைக் கையாளும் என்றும் தெரிவிக்கிறது.  வேறு ஏதோ 'காரணத்துக்காக' அந்த Q பிரிவு மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டு, வேறு ஏதோ காரணத்துக்காக 'இராணுவ இரகசியம் பிடிபட்டது' என்று செய்தி பரப்பப்படுவதாகவும் அந்த ஊடகம் எழுதியுள்ளது.

இந்நிலையில், கூடங்குளம் அணு மின் உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களுக்கு பாக்கிஸ்தானுடன் தொடர்பு உள்ளது என்று அரசு சதி செய்வதன் ஒரு திட்டமாகத் தான் இந்தக் கைது நிகழ்ந்துள்ளது என்று தமிழ் இணைய தளம் ஒன்று தெரிவித்து உள்ளது.

www.inneram.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.