இந்தியாவில் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள ராஜபட்ச பல வழக்கமான எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று(புதன்கிழமை) மாலையில் அவர் தில்லி வந்தார்.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை அடுத்து அமைந்துள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் சிறப்பு விமானத்தில் அவர் வந்தார். சிவப்புக் கம்பள வரவேற்பை மத்திய அரசு அளித்தது.குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார்.பின்னர், பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் இரவு 7 மணிக்குச் சந்தித்துப் பேசுகிறார். அங்கு ராஜபட்சவுக்கு பிரதமர் இரவு விருந்து அளிக்கிறார்.
வெள்ளிக்கிழமை காலையில் தில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி செல்கிறார். அங்கு அமைய இருக்கும் புத்தமத மற்றும் அறிவுசார் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.
கங்கிரஸ் தமிழர்களுக்கு எதிரான கட்சி என்று மறுபடியும் நிரூபித்து உள்ளது எனவும் எதிர்கட்சியான பி.ஜே.பி புலம்பியது அட ராஜபட்சேவை வரச் சொன்னதே வருங்கால பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இருக்கின்ற சுஜ்மா சுவராஜ் தானுங்கே அப்புறம் மத்தியபிரதேசம் பி.ஜே.பி ஆளும் மாநிலம் அங்குதானே புத்தமத மற்றும் அறிவுசார் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.தமிழர்கள் மீது அக்கறையுள்ள பி.ஜே.பி அரசு தடுக்க வேண்டியது தானே என்ற உண்மையை போட்டு சில ஊடகங்கள் உடைத்தவுடன் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் துடித்து போய் அப்படியெல்லாம் இல்லை நாங்க ஈழத்தமிழர்களுக்கு விசுவாசமானவர்கள் பழைய வரலாற்றை பாருங்கள் என பச்சை சந்தர்ப்பவாத பொய்யை கூசாமல் சொல்கிறார் பாருங்கள்.
///சென்னை, செப். 5: மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள புத்தமத கல்வி மைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருமாறு இலங்கை அதிபர் ராஜபட்சவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் அழைக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் தீவிரமடையத் தொடங்கிய 2008-ம் ஆண்டு முதல் இலங்கை அரசையும், அதற்கு துணைபோன மத்திய காங்கிரஸ் அரசையும் தமிழக பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைத்தால் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் போரை முன்னெடுத்துச் சென்றனர்.///
அடப்பாவிகளா பொய் சொல்வதற்கு ஒரு அளவில்லை?? “இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ்க்கும் பாரதிய ஜனதாவுக்கும் ஒரே கொள்கைதானே? 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைத்தால் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் போரை முன்னெடுத்துச் சென்றர்களாம் ஆனால் உண்மை என்ன??.
பி.ஜே.பி. தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர். (4.2.2009 ல் ஜூனியர் விகடனில் வெளியான பேட்டி)
“ இந்திய - இலங்கை பிரகதி சன்சதியா’ என்ற அமைப்பில் கங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி - யை ச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் இலங்கையில் நடந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வெளிவிவகாரப் பிரிவிவைச் சேர்ந்த ரவ்னி தாக்கூரும், பி.ஜே.பி -யின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரான சேஷாத்ரி சாரியும் சென்று வந்தனர். இவர்களுடைய பயணத்துக்கு அரசியல் காரணங்களோடு பொருளாதார, வர்த்தக விவகாரங்களும் காரணம். இந்தியாவும் இலங்கையும் உள்ளார்ந்த பொருளாதாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட இருக்கின்றன. அது தொடர்பான ஆலோசனைகளோடு, அரசியல் விவகாரங்கள் குறித்தும் இலங்கை அதிபர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள்.
சேஷாத்ரி சாரியிடம் இது குறித்து பேசினோம்.
“இலங்கை விவகாரத்தில் பி.ஜே.பி-யும் காங்கிரஸும் ஒரே கொள்கையோடுதான் செயல்படுகின்றன. இப்போது இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடக்கும் போரில் இந்தியா நிச்சயம் தலையிடாது. இந்தியாவைச் சுற்றி உள்ள நாடுகளில் நமக்குத் தொந்தரவில்லாத நாடுகள் என்றால். இலங்கையும் பூட்டானும் தான். பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளால் நமக்கு எப்போதும் தொந்தரவுதான். பொதுவாக இந்தியாவுக்குப் பொருளாதார ரீதியில் இலங்கையால் நல்ல பயன்பாடு உண்டு.பொருளாதார ஒப்பந்தங்களைப் போட நல்ல சூழ்நிலை வரவேண்டும். இலங்கையில் பதற்றம் நிலவும் சூழ்நிலையில், செய்துகொள்ளும் உடன்படிக்கைகளால் பலனில்லை. இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை இதை மனதில் வைத்து தான் முடிவு செய்யப்பட்டது.
நாங்கள் இலங்கையில் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போதும் இந்திய அரசின் நிலையை எடுத்துச் சொன்னோம். நான் இலங்கை விவகாரத்தில் பி.ஜே.பி -யின் கொள்கை என்ன என்பதையும் விளக்கினேன். அதிபர் ராஜபக்ஷேவையும் அவருடைய ஆலோசகர் பசில் ராஜபக்ஷேவையும் சந்தித்துப் பேசினோம். இப்போது புலிகளை எதிர்த்து இலங்கை ராணுவம் போராடிக் கொண்டு இருக்கிறது. இதில் கிட்டதட்ட வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அரசு என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அவர்களிடம் எடுத்துச் சொன்னோம்.
இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட அங்கு ஒரு பலம் வாய்ந்த அரசு தேவை. இதற்கு இரண்டு விஷயங்கள் முக்கியம். விடுதலைப்புலிகள் இயக்கம் மறுபடியும் பலம் பெற்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து, தமிழர் பகுதியில் தமிழ் மக்களுக்குரிய வசதிகளை செய்து, அவர்களுடைய நம்பிக்கையை அரசுத் தரப்பு பெறவேண்டும். விடுதலைப்புலிகள் இருக்கும் பகுதியில் இராணுவத்தின் பணி முடிந்தவுடன் அங்கு ராணுவம் அல்லாத,சமுதாயப் பணிகளை மேற்கொள்ளும் சிவிலியன்களின் முகம் மட்டுமே தென்பட வேண்டும். எற்கனவே பிள்ளையான், கருணா போன்றவர்களின் உதவியோடு இந்தப் பணிகளை இலங்கை அரசு செய்து வந்தாலும், இவர்களை விடவும் தமிழர்களின் நம்பிக்கைக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிப் பணிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிகையாக வைக்கபட்டது! ஆனால், இப்படி நாம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் இந்தியாவுக்கு ஓர் ஆபத்தும் இருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகு, இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்தான அச்சம் நிலவுகிறது.
அதிபர் ராஜபக்ஷே ஒரு மிதவாதி. அவர் சாதாரண எம்.பி -யாக இருந்த காலத்தியேயே அவரை கவனித்து வருகிறோம். பி.ஜே. பி ஆட்சியில் 1999 -ல் பொக்ரான் அணுகுண்டுச் சோதனை நடந்தபோது, அவர் டெல்லிக்கு வந்து எங்களைப் பாராட்டிவிட்டுச் சென்றார். அவருடைய விஜயத்துக்கு அப்போதைய அதிபர் சந்திரிகா போன்றவர்கள எதிர்ப்புத் தெரிவித்தனர். ராஜபக்ஷேவுக்கும் இந்தியாவுக்கும் நல்ல உறவு இருக்கிறது. இதனால் ராஜபக்ஷே இருக்கிறவரை பிரச்சனையில்லை. இலங்கையில் எல்லோரையும் அரவணைத்துப் போவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் சிங்களவாதத்தைக் கடைபிடிக்கும் சக்திகள் அதிகாரத்துக்கு வந்தால், தமிழர்களுக்கு எதிராகச் செயல்படமாட்டார்கள் என்ற உத்தரவாதம் இல்லை. மொழி, மத வேறுபாடு இன்றி எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்க அரசியல் சாசனம் மூலமாக நிரந்தரத் தீர்வு காணக் கோருகிறோம்.
ராஜபக்ஷே ஒரு விஷயத்தில் கண்டிப்பாக இருக்கிறார். தமிழ் மாகாணம், சிங்கள மாகாணம் எந்தையெல்லாம் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே சமயம், பஞ்சாயத்து ராஜ் சட்டம் மூலம் உள்ளூர் மக்களுக்கு இங்கே அதிகாரம் கொடுப்பதைப் போல் இலங்கையில் மொழிவாரியாகவோ இனவாரியாகவோ இல்லாமல் சுய அதிகாரம் பெற்ற உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கத் தயாராக இருக்கிறார். இதம் மூலம் உள்ளூர் மக்கள் இன, மொழி வேறுபாடில்லாமல் பலனடைய வாய்ப்பிருக்கிறது! என்றவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.
“விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பி.ஜே.பி முதலில் சாஃப்டாக இருந்ததே? பால் தாக்கரே போன்றவர்கள் பிரபாகரனை ஹீரோவாக நினைக்கிறார்களே? தமிழ் ஈழம் மட்டுமே தமிழர்களை பாதுஇகாக்கும் என்று சொல்லப்படுகிறதே?”
“ விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம். இதில் இந்திய அரசு எடுத்துள்ள முடிவை பி.ஜே.பி-யும் ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ராணுவத் தீர்வு காண முடியாது என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். குறிப்பாக, புலிகள்தான் இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்கள். அதோடு, மற்ற தமிழ் அமைப்புகளையும் அழித்து விட்டு, சர்வாதிகார அமைப்பாகச் செயல்படுகின்றனர். இது இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதல்ல. அரசியல் தீர்வுக்குப் புலிகள் எதிராக இருக்கின்றனர். தமிழர்கள், சட்டப்படியான அதிகாரம் பெற விரும்புகிறார்கள். புலிகளால் இதற்குத் தடை ஏற்படுகிறது. விடுதலைப்புலிகளின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலமே இலங்கைத் தமிழர்களுக்கு பலன் கிடைக்கும்!”
“இலங்கையில் இனி சிங்களர்களும் தமிழர்களும் ஒன்றாக வாழ முடியாது என்று சொல்லப்படுகிறதே...”
“ இது தவறான வாதம். இலங்கைத் தமிழர்களுக்கு, தாங்கள் இலங்கையின் பிரஜைகள் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். இலங்கையில் அந்நாட்டு அரசுகளும் பல தவறுகளைச் செய்துள்ளன. விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புகளும் தவறுகள் செய்தது. இலங்கையில் சிங்கள மொழியோடு தமிழும் அலுவலக மொழியாக உள்ளது. தமிழர்களும் அரசியலில் பங்கெடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அதிகாரங்களைப் பெற்றுத்தான் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் முன்னுக்கு வர முடியும். சிங்கள மக்களை எதிர்த்து, தமிழர்கள் இலங்கையில் முன்னேற முடியாது!” என்றார் சேஷாத்ரி சாரி.
சேஷாத்ரி சாரியோடு இலங்கைக்குச் சென்ற காங்கிரஸ் பிரமுகர் ரவ்னி தாக்கூரும் சாரியின் கருத்துகளையே எதிரொலிக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் போடப்பட்ட போர்நிறுத்தத் தீர்மானம் குறித்து தாக்கூரிடம் கேட்டோம்.
“ விடுதலைப்புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் நாம் ஆதரவு அளிக்க முடியாது. அவர்கள் தீவிரவாதிகள். இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுகிறோம். அவர்களுடைய உரிமைகள் கிடைப்பதற்கும் நாம் ஆதரவு கொடுப்போம். பஞ்சாப்பில் காலிஸ்தான் போன்ற பயங்கரவாத இயக்கங்களைப் பூண்டோடு அழித்தோம். இப்போது பஞ்சாப் மற்ற மாநிலங்களை விடச் சிறப்பாக இருக்கிறது. அதே மாதிரி இலங்கைத் தமிழர்கள், ‘விடுதலைப்புலிகள்தான் எதிர்காலம்’ என்று நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது!” என்று முடித்தார்.
சரோஜ் கண்பத்
_ ஜூனியர் விகடன்
பின்குறிப்பு: இந்த பேட்டி வெளியானது (4.2.2009 ல் ஜூனியர் விகடனில்) அதே ஆண்டு . 2009-ல் மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைத்தால் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் போரை முன்னெடுத்துச் சென்றகளாம்(!?) நம்ம தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அடித்து விடுகிறார்.இந்திய தேசிய அரசியல் கட்சிகளின் நேர்மையற்ற சந்தர்ப்பவாதத்தை புரிந்துக் கொள்ள இது ஒன்று போதும் என்று நினைக்கிறேன். கானல் நீரில் மீனை தேடுகின்ற தமிழக ஈழ ஆதரவு போராட்டக்காரர்கள் புரிந்துக் கொள்வர்களா???
நன்றி : வலையுகம்
No comments:
Post a Comment