Latest News

‘சந்திப்பு’ : ‘பத்திரிக்கை நிபுணர்’ சகோ. அதிரை சித்திக்



ஊடகத்துறை என்பது சமூகத்தில் நடைபெறும் நிறை, குறைகளை உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கும் சென்றடைந்து அதற்குரிய தீர்வும் எட்டுகிறது. இதனால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வித்திட முடிகிறது.

‘சந்திப்பு’ தொடருக்காக...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளுடன் சகோ. அதிரை சித்திக் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. அதிரை சித்திக் அவர்களைப்பற்றிய சிறு குறிப்பு :
'அதிரை சித்திக்' என்ற பெயரில் தனது பதினைந்தாவது வயதில் எழுத்துப் பணியை தொடங்கிய இவர் 'தினசரி'’என்ற நாளிதழுக்கு முகவராகவும், நிருபாராகவும் இருந்தவர். மேலும் பல்வேறு மாத இதழ்களுக்கு குறிப்பாக 'சுற்றுலா', 'தமிழூற்று'  போன்றவற்றிக்கு ஆசிரியராகவும் இருந்துருக்கிறார்.

பல்வேறு சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள் என எழுதியுள்ள இவர், பத்திரிக்கைதுறை பணியின் போது முன்னாள் அமைச்சர் Y.S.M. யூசுப் அவர்களிடம் பலமுறை பேட்டி எடுத்தது, மலேசியாவில் இந்தியா பத்திரிகை யாளராகச் சென்று திரு. டத்தோ சாமுவேல் அவர்களை பேட்டி எடுத்தது இவருக்கு மேலும் சிறப்பை அளிக்கின்றன.

ஊடகத்துறைப் பற்றி...
முப்பது வருடத்திற்கு முன்பெல்லாம் செய்தி துறை என்றே அழைக்க பட்டது. அதன் துறையை சார்ந்தவர்கள் செய்தியாளர் ,பத்திரிக்கையாளர்
என்றே அழைக்கப் பட்டனர். அந்த காலங்களில் செய்தி தாள் நடத்துவதென்பது மிக கடின மான காரியம் .விளம்பர துறை அவ்வளவு வலிமையானதாக இல்லை எனவே வருமானத்தை பேருக்கும் விதமாக ஒவ்வொரு நாளிதழ் நிறுவனமும் வார மாத இதழ்கள் நடத்தி வந்தன

அதில் கதை ஊர் நடப்புகள் அரசியல் வாதிகள் நடிகர்கள் பேட்டிஇடம்பெறும் இதன் மூலம் செய்தியாளர்கள் .எழுத்தாளர்கள் ஒரே குடையின் கீழ் வர நேர்ந்தது காலம் செல்ல செல்ல நவீனங்கள் உட்புகந்தன .வானொலி ,தொலைகாட்சி செய்தி துறைக்கு உதவும் விதமாக அமைந்தது .
தனியார் நிறுவனங்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களாக அனுமதிக்க பட்டனர் .வானொலி .,தொலைக்காட்சி அரசிடம் இருந்த வரை செய்தி வெளியிடுவதில் மிகவும் கவனமாக இருந்தது .தணிக்கை குழு அமைத்து கண் காணித்து வந்தது

விஞ்ஞான வளர்ச்சி அதி வேகத்தால் எல்லாத்துறையும் முன்னேறியது போல் செய்தி துறையும் முன்னேறியது ..செயற்கைகோல் அனுப்புவதில் வெற்றிகண்ட உலகம் செய்தி துறைக்கு பரிசளித்தது  தொலை காட்சிகள் செயல்படுவது மிக இலகுவானதால் ஆட்சியாளர்கள் தனது கொள்கைகளை மாற்றி கொண்டார்கள் ..அச்சு தொழில் இருந்த தனியார் துறை தொலை காட்சி மற்றும் வானொலிகளை கைப்பற்றி வணிக துறையாக மாற்றிக் கொண்டது .எழுத்து மட்டுமே செய்தி துறையாக இருந்தது ..சொல்லாற்றல் .காட்சி வடிவமைப்பும் செய்தி துறையின் அங்கமாக மாற எல்லா செயல்பாடுகளுக்கும் ஒட்டு மொத்த பெயராக (மீடியா )ஊடகம் என்ற பெயரில் அழைக்கலாயிற்று.

செய்தி துறை என்ற நலிந்த துறை செல்வம் கொழிக்கும் ஊடகதுரியாக மாறியது .அரசின் தணிக்கை கொள்கையை மாற்றிக் கொண்டது .
வரைமுறைகளை சுரிக்கிகொண்டது .நாட்டின் பாதுகாப்புக்கு ,இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்ற ஒற்றை வரி கொள்கையை கையாண்டு வருகிறது ..ஆனால் நாட்டில் வாழ்கின்ற மக்களின் மனதை புண்படுத்தும் நிகழ்வுகளை கண்டுகொவதில்லை ..அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஊடகம் .அரசை நிர்ணயிக்கும் சக்தியாக மாறியது. உலகின் அணைத்து அரசியல்வாதிகளும் பயப்படும் ஒரே துறை ஊடக துறை மட்டும் தான்.

இதற்கு ஒரு உதாரணம், ஒருவர் செல்ல பிராணியாக வளர்க்க எண்ணி ஒரு விலங்கை வளர்த்தார் .அவருக்கு உதவியாக இருக்கவேண்டும் என்பதே அவர் நோக்கம் ..காலபோக்கில் அது அசுர வளர்ச்சி அடைந்து எஜமானையே கொன்று  திண்டு விட்டது .அக்கம் பக்கத்தினர் பயம் கொண்டதை போன்று பொய்யும் புரட்டும் கொண்ட ஊடகத்தை கண்டு அரண்டு ஓடும்  நிலை உள்ளது.

"மலேசிய முன்னாள் அதிபர் மகாதீர் முகமது அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு எழுதி இருந்தார்கள் .கி.பி.15 ம் நூற்றாண்டில் எந்த சமூகம் காலார் படை வைத்து இருந்ததோ அந்த சமூகம் உலகை ஆழ முடிந்தது ..பிறகு கடற் படை வைத்திருந்த சமூகத்தின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது ..அதன் பின்னர் விமான படை உள்ள நாடுகளை ஆதிக்கம் .அடைந்ததை அறிந்தோம்

தற்போது சிறு சமூகம் ஊடகத்துறையை தன கையில் எடுத்துக் கொண்டு உளைகையே ஆட்டி படைக்கிறது ..ஒவ்வொரு சமூகமும் ஊடகத்தில் பங்கு கொள்ள வேண்டும் .அதன் செயல் பாடுகளை உன்னிப்பாக கவிக்க வேண்டும் அதில் நம்மவரும் ஈடுபாட்டுடன் இருப்பது விழிப்புணர்வுக்கு வித்தாகும்

ஊடகத்துறையில் நமது சமுதாயத்தின்  பங்கு...
இஸ்லாத்தில் செய்தி தொடர்பு துறை என்ற அதிக முக்கியத்துவம் கொடுக்கபடாததன் விளைவோ என்னவோ. கடந்த காலங்களில் நம்மவர்கள் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை அவசியம் இல்லாமல் புகை படம் எடுப்பது ஹராம் என்ற நிலை இருந்தது ..இதன் மூலமே செய்தி துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நம்மவர் தவிர்த்து வந்தனர் .காலம் செல்ல செல்ல இஸ்லாமிய கல்வியாளர்கள் பதிவு துறையில் ஈடுபட்டார்கள்.

"பிறை"என்ற மாத இதழ் பிரபலமானது இதில் மார்க்க அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் ஹதீஸ் விளக்கத்துடன் இடம் பெற்றிருக்கும் வருட சந்தா அடிப்படையில் அவ்விதழ் செயல் பட்டு வந்தது  ஊர் ஊராக சென்று வருட சந்தா வசூலிப்பது மிக பரிதாபமாக இருக்கும் காலப்போக்கில் பிறை மறைத்து விட்டது அடுத்து முஸ்லிம்முரசு ,நர்கிஸ் போன்ற பத்திரிகைகள் தலை எடுத்தன ..சிறுகதை போன்ற படைப்புகள் புகுத்தப்பட்டன அதே கால கட்டத்தில் முஸ்லீம் லீக் அரசியல் கட்சியின் பிரபலமான பிரமுகர் நாவலர் திருச்சி யூசுப் சாகிப் அவர்களால் மறுமலர்ச்சி என்ற வார இதழ் துவங்கப்பட்டு முஸ்லீம்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது கொஞ்சமும் அச்சமின்றி கட்டுரைகள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தன.

அதன் பிறகு முஸ்லிம் லீகின் தலைவர் அப்துல் சமது சாகிப் அவர்களால் மணி சுடர் என்ற அவர்களால் நடத்த பட்டது. ஊடகம் கலை மற்றும் நாடகம் சினிமா போன்றவைகளால் ஈர்க்க பட்டதால் முஸ்லீம்கள் ஊடக துறையில் நுழைய தயக்கம் காட்டினர் அதுவே ஊடகம் முஸ்லீம்களுக்கு எதிராக திரும்பியது எனலாம்

தற்போது முரட்டு தனமான .அசுர வளர்ச்சி அடைந்த ஊடகம் ..முஸ்லீம் களின் சிறிய கடிவாலத்திற்கு அடங்கா குதிரையாக உள்ளது ..ஊடகத்தில் முற்றிலுமாக நுழைத்தால் இஸ்லாத்தின் கொள்கைகளை மறந்து காணாமல் போய் விடுவோம் ..மிகவும் கவனம் தேவை ..மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் அனைத்தும் ஊடகம் என்றே அழைக்க படுகிறது அதன் அடிப்படையில் சினிமாவும் ஊடகத்தின்னூடே வருகிறது சற்று கவனம் சிதறினாலும் ..இஸ்லாத்தின் கோட்பாடுகளை இழக்க நேரிடும் என்பதால் ஊடகத்தில் இஸ்லாமியர்களின் பங்கு குறைவாகவே உள்ளது எனலாம்.

ஊடகத்துறையில்  ஈடுபடும்  இளைஞர்களுக்கு  எனது அறிவுரை ...!
ஊடகத்துறையில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அதிலிருந்து மீள்வது என்பது மிக கடினம். அது ஒரு வகையான போதை. நாம் தரும் ஆக்கம் ஒரு தாகத்தை ஏற்படுத்தி விட்டால்...பிறர் கவனம் நம் மீது திரும்பி விட்டால்... ஈடுபாட்டின் வீரியம் கூடும்... இரவு பகல் பார்க்காது உழைக்க தோன்றும் ஆனால் நமது வாழ்வாதாரத்திற்கு சரியான பதில் இருக்காது ..ஊடகத்தின் உச்சத்திற்கு சென்றால் நல்ல வழி உண்டு ஆனால் அது இலகுவான காரியம் அல்ல எனவே உங்களுக்கென்று ஒரு துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் அதில் பொருள் ஈட்டுங்கள் ஊடகத்துறையின் தொடனாக இருங்கள் அதன் மூலம் சமுதாயம் பலன் பெறட்டும் ..ஊடகம் மூலம் பொருளீட்டல் வேண்டாம்.

நம்மவர்கள் ஊடகத்தில்..... 
ஊடகத்துறையில் பல உட்பிரிவுகள் உள்ளது .அனைத்திலும் கற்ற பக்குவம் காண்கிறேன். சில சமயங்களில் வீரியமான எழுத்துகள் வேண்டும் ..அது போன்ற எழுத்துக்கள் சமுதாய அவலங்களை போக்கும். அதுவே எனக்கு பிடிக்கும். அரட்டை போன்ற விசயங்கள் அளவுடன் இருக்க வேண்டும். சமுதாய விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டும் ..

நமதூர் இளைஞர்களின் ஊடக துறை அறிவு ..தமிழகத்தின் தலை சிறந்த பத்திரிகை நடத்தும் அளவிற்கு உள்ளது

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

2 comments:

  1. வாழ்த்துகள் !

    பத்திரிக்கைத்துறையில் தனது பெரும் பகுதியை அர்பணித்த சகோ. அதிரை சித்திக் அவர்களின் கருத்துகள் என்னைப்போன்ற புதியவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக உள்ளன.

    தொடருங்கள் எங்களைப்போன்ற புதியவர்களுக்கு வழிகாட்டியாக !

    ReplyDelete
  2. வாழ்த்துகள் . அதிரை சித்திக் !

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.