Latest News

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல் அறிவிப்பு!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புள்ள சகோதர சகோதரிகளே இந்த நல்ல சந்தர்ப்பத்தை தவற விடாமல் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களில் உள்ள தவறுகளை சரி செய்வதற்க்கு நல்ல வாய்ப்பு  உடன் தங்களின் தவறுகளை திருத்திக்கொள்ளவும் புதிதாக சேர்க்க இருக்கும் பெயர்களை சேர்த்துக்கொள்ளவும்

சென்னை: தமிழக வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்க்கவும்திருத்தம் செய்யவும்  விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் அக்டோபர் 7, 14, 21 ஆகிய தேதிகளில் இதற்கான வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் பேசியபோது  வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் அக்டோபர் 1 முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2013 ஜனவரி மாதம் 1-ம் தேதியோடு 18 வயது பூர்த்தி அடைய இருப்பவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இப்போதே விண்ணப்பிக்கலாம் என்றார்.
மேலும் தாலுகா அலுவலகங்கள், வாக்குச் சாவடிகள் ஆகிய இடங்களிலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். இதற்காக அக்டோபர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவற்றை தாலுகா அலுவலகங்கள், வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பார்வையிடலாம். இணையதளம் மூலமும் பார்க்கலாம்.அக்டோபர் 6, 9 தேதிகளில் கிராம சபை கூட்டங்கள், குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டங்கள் ஆகியவற்றில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் முன்னிலையில் படிக்கப்பட்டு, தவறுகள் நீக்கப்படும்.

அக்டோபர் 7, 14, 21 மூன்று ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
.இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள 4,089 வங்கிக் கிளைகள், 7,343 அஞ்சல் அலுவலகங்கள் மூலமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து மக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளப்படும். இதற்காக வங்கிகளில் போஸ்டர்கள் ஒட்டப்படும்.இணையத்தில் சரி பார்க்கலாம்: வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்த்தவர்கள் தாங்கள் அளித்த விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை விண்ணப்பித்த 10 நாள்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சரிபார்க்கலாம்.

கால் சென்ட்டர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தம் செய்வது தொடர்பான விவரங்களைப் பெற கால் சென்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காலை 10 முதல் மாலை 6 மணி வரை தகவல்களைப் பெறலாம் என்றும் பிரவீண் குமார் கூறினார்

தகவல் : அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.