சவூதியின் கிழக்கு மாகாணத்தில் ஜூபைல் தொழிலக நகரருகே ஞாயிறன்று சம்பவித்த கோரவிபத்தொன்றில் 12 அயல்நாட்டவர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 10 பேர் இந்தியர்கள். இருவர் நேபாளிகள் ஒருவர் பாக்கிஸ்தானியர் என்று தெரியவந்துள்ளது.
இந்தியர்களில் நால்வர் மலையாளிகள், ஒருவர் ஆந்திரர், மற்றவர்கள் உ.பி மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள். மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.
நிறுவனப் பேருந்துடன் ஒன்று கனரக வாகனம் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது என்றும், மேலும் இரு கார்களும் இந்த விபத்தில் சிக்கின என்றும் ஜூபைல் நகர போக்குவரத்துத் தலைமைக் கண்காணிப்பாளர் சவூத் அல் ஒதைபி தெரிவித்தார்.
இறந்தவர்களில் 11 பேர் நாஸர் அல் ஹாஜ்ரி எனும் நிறுவனப் பணியாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவி பிள்ளை மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்வையிட்டு, காயம் பட்டவர்களுக்கும் இறந்தவர்களின் உறவினர்களுக்கும் தமது நிறுவனம் எல்லாவித நிதி உதவியையும் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment