இன்று ( 06-08-2012 ) மாலை நமதூர் காதிர் முகைதீன் கல்லூரி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் டாக்டர் சகோ. S. முஹம்மது அஸ்லம் அவர்கள் தலைமையில் இனிதே துவங்கியது.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்ட அமைந்த இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர், நமதூர் முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள், மார்க்க அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கல்லூரியின் முதல்வர் டாக்டர் A. முஹம்மது அப்துல் காதர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
No comments:
Post a Comment