புதுடெல்லி, ஆக. 6-
ரயில்களில் தீவிபத்து ஏற்பட்டால் உடடினயாக தெரிவிக்கும் வகையில் தானியங்கி அலாரம் பொருத்துவதற்கு பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நெல்லூர் அருகே தீ விபத்து ஏற்பட்டது. எஸ்11 பெட்டியில் திடீரென்று பிடித்த தீ வேகமாகப் பரவியதில் 32 பேர் உடல் கருகி இறந்தனர்.
ஆரம்பத்தில் மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது வெடிபொருட்களால் அந்தப் பெட்டி தீப்பிடித்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பபட்டுள்ளது.
இதுபோன்ற தீ விபத்துகளை தடுக்கும் விதத்தில், சிறிய புகை ஏற்பட்டாலே தானாகவே மணியடித்து எச்சரிக்கை செய்யும் நவீன கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை ரெயில் பெட்டிகளில் பொருத்த வேண்டும் என்று பாராளுமன்ற நிலைக்குழு, மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது.
No comments:
Post a Comment