ஓய்வு பெற்ற பின்னர் எந்த பொருளாதார சிக்கல் இன்றி வாழ்வதற்காக முன்கூட்டியே சேமிப்பதில் இந்தியர்கள் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக மேலாண்மை ஆலோசனை, தொழில்நுட்ப சேவைகள் மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனமான அக்செஞ்சர் நிறுவனம், உலக அளவில் ஓய்வு சர்வே நடத்தியது. மொத்தம் 15 நாடுகளில் 25 வயது முதல் 60 வயது வரையிலான 8112 பேரிடம் சர்வே எடுக்கப்பட்டது. இதில் ஓய்வுக்குப் பிறகு வயதான காலத்தில் சிறப்பாக வாழ்வதற்காக, முன்கூட்டியே சேமிப்பதில் இந்தியர்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பது தெரியவந்தது.
இந்தியர்கள் 39 சதவீதம் பேர் ஓய்வு காலத்திற்காக முன்கூட்டியே தயாராகும் வகையில் சேமிப்பின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். சீனர்கள் 28 சதவீதம் பேரும், அமெரிக்கர்கள் 21 சதவீதம் பேரும் எதிர்காலத்துக்காக போதிய அளவில் சேமித்து வைப்பதில் 2 மற்றும் 3-ம் இடங்களில் உள்ளனர்.
ரஷ்யர்கள் (4 சதவீதம்), ஜப்பானியர்கள் (5 சதவீதம்) மற்றும் தென் ஆப்பிரிக்கா (8 சதவீதம்) இந்த விஷயத்தில் கடைசி இடத்தில் இருக்கின்றனர்.
உலக அளவில் 82 சதவீதம் பேர் ஓய்வுக்குப் பிறகு தாங்கள் பொருளாதார நிலைமை பற்றி கவலைப்படுகின்றனர். இந்தியாவில் 84 சதவீதம் பேர் இவ்வாறு கலைப்படுகின்றனர். இதில் பிரிட்டன் (65), ஜெர்மனி(66), ஆஸ்திரேலியா (69), அமெரிக்கா (70) இந்தியாவை விட பின்தங்கியிருக்கின்றன.
இதேபோல் ஆய்வில் பங்கேற்றவர்களில் 99 சதவீத இந்தியர்கள், எதிர்கால திட்டமிடுதல் அவசியம் என்றே கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment