இதை பார்த்த அப்பகுதி மக்கள் தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துதீயை முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் பழைய நாற்காலிகள், பெஞ்சுகள் கிடந்தன. இதற்கு மத்தியில் பேப்பர் குவியல்களும் எரிந்தநிலையில் கிடந்தன.
இந்த பேப்பர் எல்லாம் ஆவணங்களாக இருக்கலாமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்தனர். பின்பு அவர்கள் தீ விபத்து ஏற்பட்ட மேல்தளத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறும்போது, வளர்ச்சி பிரிவு இருக்கக்கூடிய பனகல் கட்டிடத்தில் சின்ன தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்ப என்று தெரியவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் எந்தவித ஆவணங்களும் எரியவில்லை. ஆட்களுக்கும் எந்தவித சேதமும் இல்லை என்று கூறினார்.
மேலும் இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment