Latest News

சுற்றுலா பயணிகளை கடத்திக் கொன்றது நரசிம்மராவா ?

புது தில்லி : 1995ல் காஷ்மீரில் சிறையில் இருந்த ஜெய்ஷ் இ முஹம்மத் நிறுவனர் மசூத் அசார், பத்திரிகையாளர் டேனியல் பேர்லை கொலை செய்த ஒமர் ஷேக் உள்ளிட்ட 21 நபர்களை விடுவிப்பதற்காக ஹர்கத் உல் அன்சார் 6 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கடத்தி கொன்றதாக கூறப்பட்டது. இச்சூழலில் உண்மையில் கடத்தி கொன்றது யார் என்று வெளி வந்துள்ள புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஜுலை 1995ல் ஜான் சைல்டு, டொனால்டு ஹட்சிங்ஸ் (இருவரும் அமெரிக்கர்கள்), கீத் மங்கான், பால் வெல்ஸ் (இருவரும் இங்கிலாந்து), ஜெர்மனியை சார்ந்த டிர்க் ஹசர்ட் மற்றும் நார்வேயை சார்ந்த ஹன்ஸ் கிறிஸ்டியன் ஆகிய ஆறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஹர்கத் உல் அன்சாரின் துணை அமைப்பான அல்- பரான் எனும் குழுவால் கடத்தப்பட்டனர்.

ஆறு சுற்றுலா பயணிகளையும் விடுவிக்க வேண்டுமென்றால் பிற்காலத்தில் ஜெய்ஷ் இ முஹம்மதை நிறுவியரும் முன்னாள் உள்துறை அமைச்சர் முப்தி முஹம்மது சையதின் மகளை மீட்க காந்தஹார் சென்று இறக்கி விடப்பட்டவருமான மசூத் அசார், பாகிஸ்தானில் பத்திரிகையாளர் டேனியல் பெய்ர்லை கொலை செய்த ஒமர் ஷேக் உள்ளிட்ட 21 நபர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஹர்கத் உல் அன்சார் கோரிக்கை விடுத்தது.

அரசாங்கம் அதற்கு ஒத்துகொள்ளாத நிலையில் ஜான் சைல்டு எனும் அமெரிக்கர் மட்டும் தப்பித்து கொண்டார். ஹன்ஸ் கிறிஸ்டியன் தலை அறுபட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மற்ற 4 நபர்களை பற்றிய எவ்வித துப்பும் கிடைக்காத நிலையில் அவர்களை தீவிரவாதிகள் கொன்றிருக்கலாம் என்று கூறப்பட்டது.

17 ஆண்டுகள் கழித்து பிரிட்டிஷ் பத்திரிகையாளர்கள் அட்ரியன் லெவி மற்றும் கத்தி ஸ்காட் க்ளார்க் எழுதியுள்ள மெடோ எனும் புத்தகத்தில் இச்சுற்றுலா பயணிகளை மீட்க அரசு முனைப்பு காட்டவிலை என்பதோடு அவர்களை கடத்தியதே அரசின் ஆதரவு பெற்ற கூலி படைகள் தான் என்று ஆதாரபூர்வமாக எழுதியுள்ளார்.

அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் பாகிஸ்தானின் மீது உலக அரங்கில் அழுத்தம் கொடுக்கவே நேரடியாக இச்சம்பவத்தை நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளதோடு அவர்கள் கடத்திய இடம் உள்ளிட்ட அனைத்தும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.  மேலும் ஜுலை 5, 1995 அன்று அரு எனும் இடத்துக்கு சுற்றுலா பயணிகள் கடத்தி செல்லப்பட்ட போது அருகிலிருந்த ராஷ்டிரியா ரைபிள்ஸ் முகாமிற்கு சென்று விஷயத்தை சொன்ன வெளிநாட்டு பெண்ணை அங்கிருந்த மேஜர் வன்புணர்வு செய்த அதிர்ச்சிகரமான சம்பவமும் குறிப்பிடப்படுள்ளது.

ராணுவத்தின் மீது அப்போதைய இந்திய பிரதமரின் மீதும் நேரடியாக குற்ற்ம் சாட்டும் புத்தகம் இந்தியாவில் வெளியிடப்பட்டு மாதக்கணக்காகியும் இந்திய ராணுவத்தின் தரப்பில் இருந்து எவ்வித மறுப்பும் வெளியாகவில்லை. மேலும் இந்தியாவின் புகழ் பெற்ற ஆங்கில நாளிதழ் ஒன்று இது குறித்து ராணுவத்தின் மூத்த அதிகாரிகளை நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சல் மூலமும் விளக்கம் கோரியும் எவ்வித பதிலும் கிட்டாததது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.