வாஷிங்டன் : கடந்த மாதம் பாகிஸ்தான் ராணுவத்தின் மீதான நேட்டோ கூட்டு படைகளின் தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தான் – அமெரிக்க உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் இச்சம்பவம் தற்செயலான ஒன்று அல்ல என்று கூறிய பாகிஸ்தான் நேட்டோ படைகளுக்கு உணவு எடுத்து செல்லும் பாதையை துண்டித்ததுடன் அங்குள்ள ராணுவ தளத்திலிருந்து அமெரிக்காவை வெளியேற சொன்னது.
இச்சூழலில் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வால் ஸ்டீரிட் ஜர்னல் பத்திரிகை இச்சம்பவம் பாகிஸ்தானின் அனுமதியுடனே நடந்ததாகவும் அவ்விடத்தில் இருந்தது தன்னுடைய ராணுவம் என்பது தெரியாமல் பாகிஸ்தான் தாக்குதலுக்கு பச்சை கொடி காட்டியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி வரும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி இச்செய்தியை வெளியிடுவதாக கூறிய அப்பத்திரிகை இது ஆரம்ப நிலை முடிவு என்றும் வேறு ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் இம்முடிவு மாற கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
விமான தாக்குதலுக்கு முன் தாக்குதல் நடத்திய குழு அமெரிக்க, ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் தகவல் தொடர்பு குழுவை தொடர்பு கொண்டதாகவும் அக்குழுவும் அப்பகுதியில் தோழமை படைகள் எதுவும் இல்லை என்று உறுதிபடுத்தியதாகவும் விபரங்களை தெரிவிக்கிறது.
பாகிஸ்தான் மீது தாங்கள் வேண்டுமென்றே தாக்குதல் தொடுக்கவில்லை என்று சொல்லும் அமெரிக்கா அதற்காக மன்னிப்பு கேட்பது சாத்தியமில்லை என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானோ தான் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செய்யும் தீவிரவாதத்திற்காக எதிரான போரில் தன்னுடைய படைகளை இழப்பதோடு மட்டுமில்லாமல் தோழமை படைகளாலேயே தன்னுடைய வீர்ரகள் கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது என்று கூறுவதும் கவனிக்கத்தக்கதாகும்.
நன்றி: இந்நேரம்.காம்
No comments:
Post a Comment