அஸ்ஸலாமு அலைக்கும்....
கடந்த 10/11/2011 அன்று மதியம் சுமார் 2:00 மணி அளவில் அதிராம்பட்டினம், கீழத்தெரு, புதுக்குடியில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் மூன்று வீடுகள் முற்றிலும் எறிந்து சாம்பலாயின.! வீட்டிலுள்ள அனைத்து உடமைகளும் தீக்கிரையானது.! அப்பொழுது கேள்விப்பட்ட சேர்மன் சகோ.அஸ்லாம் அவர்கள் தீ விபத்தில் சேதம் அடைந்த இடத்திற்க்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டோருக்களுக்கு ஆறுதல் கூரியதோடு மறுவாழ்வு பெறுவதற்க்கும் அவர்களுடைய இயல்பு நிலை ஏற்பட உறுதுணையாக இருப்பேன் என கூறினர்.
அதன்படி இன்று 30/11/2011 மாலை 5 மணியளவில் கீழத்தெரு சங்கத்தில் தீ விபத்தால் சேதம் அடைந்த குடும்பங்களுக்குகாக திரட்டப்பட்ட நிதியை சேர்மன் சகோ.அஸ்லாம் அவர்கள் கீழத்தெரு சங்க தலைவர் சகோ.தாஜூதீன், செயளாலர் சகோ.சேக் தாவூது, துணைத் தலைவர் சகோ.சாகுல் ஹமீது மற்றும் துணைப் பொருளாலர். சகோ .நைனா முகமது ஆகியோரிடம் ஒப்படைத்தார். அவர்களுடன் அதிரை TIYA-வின் துணைச் செயளாலர் சகோ .அப்துல் ஹலீம் அவர்களும் மற்றும் அதிரை AAMF-வின் உறுப்பினர் சகோ .முகமது சலீம் அவர்களும் கூட இருந்தார்கள்.
உதவி செய்தவர்களின் விவரங்கள்:
1.சேர்மன் சகோ.அஸ்லாம் அவர்களின் மூலமாக – Rs.65,000
2.அய்டா-சவூதி மூலமாக – Rs.10,000
3.துபை - கீழத்தெருமுஹல்லா மூலமாக – Rs.1,00,000
4.துபை TIYA மூலமாக – Rs.50,000
5.அதிரை கீழத்தெருமுஹல்லா மூலமாக – Rs.40,000
6.TMMK அதிரை கிளை மூலமாக – Rs.42,342
நன்றி : அதிரை டாட் இன்
No comments:
Post a Comment