குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லா சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டும் உள்ளது. பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் ஜீரணமாகும். தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்க்கும் சக்தியை உடைய புரதப் பொருள் குழந்தையை கொடிய நோய்கள், மார்பு சளி (நிமோனியா) தோலில் ஏற்படும் ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.மருந்துளே கிடைக்க வழியில்லாத குக்கிராமங்களில் கூட கிருமிகளினால் ஏற்படும் வாந்தி, பேதியை தாய்ப்பால் மட்டும் கொடுத்து குணப்படுத்தலாம். தாய்ப்பாலில் புரதம், கொழுப்புத் சத்து மற்றும் மூளை வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமில, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை இருப்பதால் குழந்தை சீராக உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சி பெற்று வளரும்.
தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் ரத்தநாள அடைப்பு நோய்கள் வரும். வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது. தாய்ப்பாலில் நோய்க்கிருமிகள் இருப்பதில்லை.

No comments:
Post a Comment