ஒரு வீட்டில் இரண்டு மின் விளக்கு அல்லது ஒரு ஃபேனை இரண்டு மணி நேரம் ஆப் செய்தால் 80 லட்சம் வீடுகளுக்கு மின் தடையை முழுமையாக தவிர்த்து விடலாம். மின்சார சேமிப்பு மற்றும் மின் தடையை தவிர்க்கும் முறை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் வேண்டும்.
தமிழகத்தில் மின் உபயோகத்திற்கும், மின் உற்பத்திக்கும் 2 ஆயிரத்து 500 மெகாவாட் இடைவெளி இருக்கிறது. 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு மின் வாரியம் பெரும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. இதனால் மக்களின் முழு ஒத்துழைப்பு மின் வாரியத்திற்கு அவசியம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் 2 மின் விளக்குகளை அல்லது ஒரு ஃபேனை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தவிர்த்தால் (ஆப் செய்தால்) போதும் 80 லட்சம் வீடுகளின் மின் தடையை முற்றிலுமாக தவிர்த்து விடலாம். அரசு அலுவலகங்களில் அனாவசியமாக லைட்டுகள் எரிவதையும், ஃபேன்கள் சுற்றுவதையும் நிறுத்த வேண்டும். பகல் நேரங்களில் இதன் உபயோகத்தை கண்டிப்பாக தவிர்ப்பதற்கு பழகி கொள்ள வேண்டும். இது போன்று செய்தால் மின்சாரத்தை சேமிக்கலாம். வீடுகளில் செலவிடும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கு 3 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டியுள்ளது. இரண்டு யூனிட் மின்சாரம் வீணாகத்தான் போக வேண்டியிருக்கிறது. இதனால் மின்சாரத்தை மக்கள் மிச்சப்படுத்த வேண்டும்
அவசர தொலைபேசி எண் மண்டல வாரியாக அறிவிப்பு
சென்னை : 24 மணி நேரமும் போலீசை தொடர்பு கொள்ள மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரச்னை தொடர்பாகவும் தகவல் தெரிவிக்கலாம். குறுஞ்செய்தியும் அனுப்பலாம். சென்னை போலீஸ் தெற்கு, வடக்கு, மத்திய என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மக்கள் தங்கள் அவசர இலவச அழைப்பான 100ஐ தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சென்னை மாநகர போலீஸ் தற்போது தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
தற்போது பொது மக்களின் நன்மைக்காக ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு செல்போன் எண் வசதி செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் குறைகளை தெரியபடுத்தவும், அவசர தேவைக்கும் தொடர்பு கொள்ளலாம். குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமும் தகவல் தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் தகவல்களை தெரிவிக்கலாம்.
அதன்படி வடக்கு மண்டல மக்கள் 90031 30104, தெற்கு மண்டலம் 90031 30102, கிழக்கு மண்டலம் 90031 30101, மேற்கு மண்டல மக்கள் 98408 24100 என்ற எண்ணில் தகவல்களை தெரிவிக்கலாம். விபத்து, போக்குவரத்து பிரச்னைகளை 90031 30103 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். குறுஞ்செய்திகளை 95000 99100 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.
மூளை சுறுசுறுப்புடன் இருக்கும் மீன் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
நியூசிலாந்தின் மஸ்ஸே யுனிவர்சிட்டி பேராசிரியர் வெல்மா ஸ்டோன்ஹவுஸ் தலைமையிலான குழுவினர், ஞாபக சக்திக்கும், மீன்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக 176 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்தனர். பின்னர், இவர்களுக்கு வஞ்சிரம், இறால் உள்ளிட்ட பல்வேறு வகையான கடல் மீன் உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து ஆய்வு செய்தனர்.
மீண்டும் அவர்களிடம் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை பரிசோதித்தபோது, ஞாபக சக்தி 15 சதவீதம் அதிகரித்திருந்தது தெரிய வந்தது. அதாவது, மீன்களில் எண்ணெய் வடிவில் உள்ள ஒமேகா&3 என்ற கொழுப்பு அமிலம் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அமிலம் மனித உடலில் உருவாகாது. எனவே, மீன்களை சாப்பிடுவதன் மூலமே இதைப் பெற முடியும். இது வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியமாகிறது. மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், மனநலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறதுÕ என ஸ்டோன்ஹவுஸ் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment