கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 30 -க்கும் மேற்பட்ட கோர்ட்டுகள் செயல்பட்டு வருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை கோர்ட்டு வளாகத்தில் போலி வக்கீல்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் அவர்கள் புகார் தாரர்களிடம் பணம் பறிப்பதாகவும் வக்கீல்கள் சங்கத்திற்கு புகார் வந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்கோர்ட்டு வளாகத்தில் சுற்றி திரிந்த கிணத்துக்கடவை சேர்ந்த போலி வக்கீல் அம்புரோஸ் என்பரை வக்கீல்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் போலி வக்கீல்கள் மூலம் சிங்கா நல்லூரை சேர்ந்த என்ஜினீயர் சிவக்குமார் போலி மனைவியை ஆஜர்படுத்தி கோவை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து பெற்றது தெரிய வந்தது.
இந்த விவகாரம் கோவை வக்கீல்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வக்கீல்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் போலி வக்கீல்களை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டது. இது தொடர்பாக தலைமை நீதிபதியிடமும் வக்கீல்கள் மனு கொடுத்தனர். இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி சொக்கலிங்கம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதில் கோர்ட்டில் வக்கீல்கள் வழக்கு தாக்கல் செய்யும் போது தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட எண், அவரது பெயர், முழு முகவரி, போன் நம்பர் ஆகியவற்றை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அதே போல் குடும்ப நல கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் விவாகரத்து கோருபவர்கள் திருமணத்தின் போது எடுத்து கொண்ட போட்டோக்கள் கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும்.
அவர்களுக்காக வாதாடும் வக்கீல்கள் பார் அசோசியேசனால் கொடுக்கப்பட்ட அடையாள அட்டையின் நகல், முகவரி, போன் நம்பர் ஆகியவை கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மனுக்கல் தள்ளுபடி செய்யப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமுலுக்கு வந்தது. இந்த உத்தரவு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கும் பொருந்தும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment