முல்லை பெரியாறு பிரச்சினையில் கேரளாவை சேர்ந்தவர்கள் முல்லை பெரியாறு அணையின் தலை மதகை உடைக்க முயன்றதோடு, இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளிலும் மூணாறு, கம்பம் பள்ளதாக்கிலும் உள்ள ஏலக்காய் தோட்டங்கள், தேயிலை எஸ்டேட்டுகளில் பணிபுரிந்த அப்பாவி ஏழை தமிழர்களை தாக்கினர்.
இதையடுத்து தமிழர்கள் கேரள பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி அகதிகள் போல் தமிழகத்திற்கு வந்தனர். தொடர்ந்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் சாலைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் இருந்து எந்த பொருட்களும் அங்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதனால் முல்லை பெரியாறு அணையை ஒட்டியுள்ள ஏலக்காய் தோட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்ட ஏலக்காய் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக தோட்டங்களில் உற்பத்தியான ஏலக்காயை பறிக்கவும், அதைப் பதப்படுத்தவும் ஆள் இல்லாத நிலை உருவானது. இதன் மூலம் கேரள ஏலக்காய் விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.5 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதோடு உற்பத்தியான ஏலக்காயை பறிக்க முடியாததால் அவை வீணாகி நஷ்டத்தை மேலும் அதிகமாக்கி உள்ளதாக அவர்கள் வருத்தப் பட்டுள்ளனர். தமிழக விவசாயிகளை தாக்கி விரட்டியடித்ததன் மூலம் கேரளாவுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.10 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல, தேயிலை, காப்பி, வாசனை திரவியங்களின் விற்பனையும் முல்லை பெரியாறு பிரச்சினை காரணமாக முடங்கி போயுள்ளது.
கடந்த 5-ந் தேதி முதல் நேற்று வரை உள்ள நஷ்டத்தை கணக்கிட்டால் கூட கேரளாவுக்கு இழப்பு ரூ.1000 கோடியை தாண்டும் என இரு மாநில எல்லையில் தொழில் நடத்தும் நிறுவனத்தினர் தெரிவித்து உள்ளனர்.

No comments:
Post a Comment